மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய மகா சிவராத்திரி...சிறப்பாக ஆரம்பம்-படங்கள்
இலங்கை வரலாற்றில் இந்துக்களின் வரலாற்று புகழ் மிக்க திருகேதீச்வர ஆலயத்தின் 2020 ஆண்டுக்கான மகா சிவராத்திரி நிகழ்வு லட்சக்கனக்கான பக்தர்களின் பங்கு பற்றுதலுடன் இன்று இடம் பெற்று வருகின்றது.
ராவணனின் மனைவி மண்டோதரி வழிபட்ட சுமார் 3000 வருட வரலாறு கொண்ட திருக்கேதீஸ்வர ஆலயம் பாடல் பெற்ற தலங்களுள் மிக முக்கியமானதாகும்.
இன்றைய தினம் உலகம் முழுவதும் இருந்து வருகை தந்த சிவ பக்தர்கள் மன்னார் பாலாவியில் நீராடி பாலாவி தீர்த நீரை திருக்கேதீஸ்வர ஆலயத்தினுள் உள்ள மகா சிவ லிங்கத்திற்கு நீர்வார்த்து நெய் விளக்கு ஏற்றி வேண்டுதல்கள் மற்றும் நேத்திகளை செலுத்தினர்.
அத்துடன் சிவராத்திரி நிகழ்வுகளை முன்னிட்டு திருக்கேதீச்வர திருப்பணிசபையின் ஏற்பாட்டில் பல்வேறு பட்ட இந்து கலாச்சார நிகழ்வுகள் அறநெறி சொற்பொழிவு நிகழ்வுகளும் இடம் பெற்று வருகின்றது.
இலங்கை மற்றும் ஏனைய நாடுகளில் இருந்து சுமார் எட்டு லட்சத்துக்கும் அதிகமான பக்கத்கர்கள் இன்றைய சிவராத்திரி நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளனர்.

Reviewed by Author
on
February 22, 2020
Rating:

No comments:
Post a Comment