இது சிங்கள பௌத்த நாடு! அதை யாராலும் மாற்ற முடியாது! கிழக்கு ஆளுநர் பகிரங்க அறிவிப்பு -
நம் நாடு சிங்கள நாடு, மேலும் இது ஒரு பௌத்த நாடு, அதை யாரும் மாற்ற முடியாது என கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தெரிவித்துள்ளார்.
திருகோணமைலையில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அரசாங்கம் தேர்ந்தெடுக்கப்பட்டது. அவர் போரை வெல்ல எல்லா நடவடிக்கைகளையும் எடுத்து எங்களுக்கு ஒரு இராணுவ வெற்றியைக் கொடுத்தார்.
நாட்டை விடுவித்தோம், அதன்பிறகு நாட்டை அபிவிருத்தி செய்வதற்கும், நாட்டை குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை அபிவிருத்தி செய்வதற்கும் சில நடவடிக்கைகளை எடுத்தார்.
பின்னர் 2015இல் அந்த வெற்றியை இழந்தோம். நான் ஒரு அரசியல் வெற்றியைப் பற்றி பேசவில்லை. 2015இல் நாங்கள் வென்ற நாட்டை இழந்தோம். ஆனால் மீண்டும் இரண்டு மாதங்களுக்கு முன்பு எங்களுக்கு கிடைத்த அரசாங்கம் சில தவறுகளை புரிந்து கொள்ள முயற்சிக்கின்றது என குறிப்பிட்டுள்ளார்.
இது சிங்கள பௌத்த நாடு! அதை யாராலும் மாற்ற முடியாது! கிழக்கு ஆளுநர் பகிரங்க அறிவிப்பு -
Reviewed by Author
on
February 15, 2020
Rating:

No comments:
Post a Comment