அண்மைய செய்திகள்

recent
-

செயல்பாடு கொண்ட கத்தோலிக்கராக அன்பிய மக்களாக இருக்க வேண்டும்-ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை

ஒவ்வொருவரும் அன்பிய வாழ்வுக்கு தங்களை புதுப்பித்தவர்களாக வாழ மன்னார் திருச்சபை இவ் வருடத்தை அன்பிய புதுப்பித்தல் ஆண்டாக
பிரகடனப்படுத்தியுள்ளது. கடந்த வாரம் ஒவ்வொரு பங்கினதும் அன்பிய
செயல்பாட்டுக்கான உறுதிப்பாட்டை இறைவன் சந்நிதானத்தில்
காணிக்கையாக்கியுள்ளனர். ஆகவே பார்த்துக் கொண்டிருக்கும் கத்தோலிக்கராக இருக்காது செயல்பாடு கொண்ட அன்பிய மக்களாக இருக்க வேண்டும் என மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை இவ்வாறு தெரிவித்தார்.

ஞாயிற்றுக் கிழமை (02.02.2020) மன்னார் மறைமாவட்டத்தின் பழமைவாய்ந்த
கத்தோலிக்க கிராமங்களின் ஒன்றான முத்தரிப்புத்துறை புனித.செங்கோல் அன்னை ஆலயத் திருவிழாவில் தலைமைதாங்கி பெருவிழா கொண்டாட்ட
கூட்டுத்திருப்பலியின்போது மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை இங்கு தனது மறையுரையில் தொடர்ந்து தெரிவிக்கையில்

நம்பிக்கையுடன் ஒவ்வொருவரும் வாழப் பழகிக்கொள்ள வேண்டும். தூய ஆவியின் கொடைகளைப் பெற்றவர்களாக ஞானத்தைப் பெற்ற மக்களாக கடவுளுக்கு உகந்த பிள்ளைகளாக நாம் வாழ வேண்டும்.

நாம் ஞானமுள்ள மக்களாகவே வாழுகின்றோம் என்ற சிந்தனையில் வாழ்ந்தாலும் அது ஒவ்வொரு கட்டத்திலும் எமது வாழ்வோடு இணைந்திருக்க வேண்டும்.

அப்பொழுதுதான் அது மக்களோடு மக்களாக இணைந்த வாழ்வாக அமையும். அன்றேல் எமது குடும்பங்களுக்கிடையே சண்டை சச்சரவு என்றும் மற்றவர்களுக்கு எதிராக செயல்பட்டுக் கொண்டும் மற்றவர்களை முன்னேற விடாமலும் நாம் ஒருவருக்கு ஒருவர் போட்டி போட்டுக் கொண்டு பிரச்சனைகளுக்கு உள்ளாகி வரலாம்.

இயேசு இறைவனின் ஞானத்தைப் பெற்று கடவுளுக்கு உகந்தவராக செயல்பட்டாரோ அவ்வாறு நாமும் ஞானத்தைப் பெற்றவர்களாக மற்றவர்களுக்கு உதவி புரியும் மக்களாக வாழ வேண்டும்.

மன்னார் மறைமாவட்டத்தில் இவ் வருடம் புதுப்பித்தல் என்ற மையக்கருத்துடன் இவ்வாண்டு சிந்தித்து செயல்பட்டு வருகின்றோம்.

அத்துடன் அன்பியங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் எனவும் இதன் உறுதிப்பாட்டை மன்னார் மறைமாவட்டத்திலுள்ள ஒவ்வொரு பங்கும் கடந்த வாரம் இறைவனின் சந்நிதானதத்pல் காணிக்கையாக்கினர்.

ஆகவே ஒவ்வொரு பங்கு மக்களும் தங்கள் பங்குகளில் புத்துணர்ச்சி
கொண்டவர்களாக அன்பிய வாழ்வை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

எம்மில் சிலர் பழமை மாறக்கூடாது என்றும் இன்னும் சிலர் புதுமையை நோக்கி பயணிக்க வேண்டும் என கேட்டு நிற்பர். ஆனால் நாம் ஆண்டவருக்கு உகந்த மக்களாக அவருக்கு ஏற்ற விதத்தில் நாம் எமது வாழ்வை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

புனிதர்களின் வாழ்வை நாம் சற்று திரும்பிப் பார்த்தால் அவர்கள் எத்தனையோ நன்மைகளை செய்துள்ளனர். அவர்களின் நன்மைத்தனத்தால்தான் திருச்சபை இன்று கட்டியெழுப்பபட்டுள்ளது.

மன்னார் மறைமாவட்டத்திலும் இறை நம்பிக்கை கொண்டவர்களாக அறுநூறுக்கு மேற்பட்டவர்கள் தங்கள் உயிரையும் கொடுத்தவர்களாக இருக்கின்றனர்.அவர்கள் சிந்திய இரத்தம்தான் இன்றும் எம்மை வலிமைப் படுத்திக் கொண்டு இருக்கின்றது.

இதனால்தான் நாம் விசுவாசத்திலும் நம்பிக்கையிலும் உறுதியாக நிற்க எமக்கு வலிமை சேர்த்து தரப்பட்டுள்ளது.

ஆகவே இந்த நம்பிக்கையும் வலிமையும் எமக்கு இருக்கின்றதா என்பதை நாம் எமக்குள் கேட்டுக் கொள்ள வேண்டும்.

எமது செபத்திலும் ஒருத்தலிலும் இறை நம்பிக்கையிலும் நாம் இறைவனோடு எவ்வளவு தூரம் இணைந்திருக்கின்றோம் என்பதையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இயேசுவை கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கும் தினத்தை இன்று (02.) நாம் நினைவு கூறுகின்றோம். இறையேசு சகோதர சகோதரிகளுக்காக வாழ்ந்ததுபோன்று நாம் பார்த்துக் கொண்டிருக்கும் கிறிஸ்தவர்களாக இருக்காது நாளாந்தம் செயல்படும் கிறிஸ்தவ மக்களாக வாழ நாம் முயற்சிப்போம். இவ்வாறு நாம் வாழ முனையும்போது எமது மத்தியில் ஏற்படும் தவறுகள் எம்மிலிருந்து அகன்று விடலாம்.

எனது முன்னோர் இக் கிராமத்தில் ஒன்றினைந்து இருந்ததையும் நான்
இவ்வேளையில் நன்றியுடன் நினைவு கூறுகின்றேன்.

நீங்கள் அன்னையின் பிள்ளைகளாக நல்ல கத்தோலிக்க மக்களாக வாழ அன்பிய வாழ்வுக்கு மனம் திரும்பியவர்களாக வாழ இறைவன் உங்கள் ஒவ்வொருவரையும்  ஆசீர்வதிப்பாராக என இவ்வாறு தனது மரையுரையில் தெரிவித்தார்.

செயல்பாடு கொண்ட கத்தோலிக்கராக அன்பிய மக்களாக இருக்க வேண்டும்-ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை Reviewed by Author on February 03, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.