சிறுநீர்ப் பாதை நோய்த் தொற்று ஏற்பட காரணம் என்ன? அதனை எப்படி சரி செய்யலாம்? -
இந்தச் சிறுநீர்ப் பாதை நோய்த் தொற்று பெண்களுக்குத் தான் அதிக அளவில் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இதற்கு காரணம் சிறுநீர் வடிகுழாய் ஆண்களை விடப் பெண்களுக்கு சிறியதாக இருப்பதே ஆகும்.
சிறுநீர் கழிக்கும் போது எரிதல், ,சிறுநீர் கழிக்கும் போது வலி ,அடிக்கடி சிறுநீர் வருவது போன்ற உணர்வு ,உடலுறவின் போது வலி ,கழிவறைக்கு அடிக்கடி போவது ,சிறுநீரில் சளி அல்லது இரத்தத்தின் தோற்றம் ,அடி வயிற்றில் வலி மற்றும் பிடிப்புகள் ,துர்நாற்றம் வீசும் அடர்த்தியான சிறுநீர் ,அதிக அல்லது மிக சிறிய சிறுநீர் ,காய்ச்சல் மற்றும் குளிர் ,முதுகு வலி, குமட்டல் மற்றும் வாந்தி போன்ற அறிகுறிகளை வைத்தே இதனை அறிந்து கொள்ளலாம்.
மேலும் சிறுநீர்ப் பாதை நோய்த் தொற்று பாதிப்பு ஆரம்ப நிலையில் இருக்கும் போது மருத்துவமனைக்கு சொல்லமால் வீட்டிலேயே இருந்து கூட சில எளிய வைத்தியங்களை செய்ய முடியும். தற்போது அவற்றை பார்ப்போம்.

- குறைந்தபட்சம் 2 லிட்டர் தண்ணீர் தினமும் குடிக்க வேண்டும். அதனால் உங்கள் உடல் புதிய இரத்தத்தை உற்பத்தி செய்கிறது.மேலும் முக்கியமாக உடலிலிருந்து அனைத்து நச்சுகள் மற்றும் கழிவுகள் நீக்கப் படுகிறது.நம் உடல் வியர்வை வடிவில் நீரை இழக்கிறது.
- 2 சின்ன வெங்காயம், 1 டீஸ்பூன் வெந்தயத்தை ஒரு டம்ளர் நீரில் போட்டு சூடேற்றி, 2 நிமிடம் கொதிவிட்டு இறக்கிவிடுங்கள். இதை வடிகட்டி இளஞ்சூடாக குடிக்கலாம்.இதைத் தொடர்ந்து பருகி வர, நோயிலிருந்து குணமடையலாம்.
- பச்சைப் பூண்டைத் தட்டி உட்கொள்ளலாம். பூண்டில் உள்ள அலிசின் ஒரு சிறந்த நுண்ணுயிர்க் கொல்லி என்பதால் நோய்த் தொற்று குறைய வாய்ப்புள்ளது.
- பார்லி தண்ணீர் இது ஒரு சிறந்த இயற்கையான சிறுநீர் இறக்கி.இது போதிய சிறுநீர் கழிக்க உதவுவதோடு,உடலின் எலக்ட்ரோலைட் சமன்பாட்டிற்கும் உதவுகிறது.
- தேநீரில் இஞ்சியைத் தட்டி கொதி வந்தவுடன் வடிகட்டி எடுத்துப் பருகலாம்.இதுவும் இந்தத் தொற்றுக்குச் சிறந்த நிவாரணி.
- உளுந்து 4 டீஸ்பூன் உளுந்தை நன்றாகக் கழுவி, ஒரு சொம்பு நீரில் போட்டு 1 மணி நேரம் ஊறவைக்கலாம். பிறகு இந்தத் தண்ணீரை மட்டும் குடித்து வருவது நல்லது.
- இனிப்பு குறைவான பழச்சாறுகளை அருந்துங்கள். இது போல் நீங்கள் பழச்சாறுகளை அருந்தும் போது சிறுநீர்ப் பாதையில் இருக்கும் நோய்த்தொற்று விரைவாகக் குணமடைய நேரிடுகிறது.
- இளநீர் மற்றும் மோர் இளநீர்,நுங்கு,தயிர் மற்றும் மோர் போன்ற குளிர்ச்சியான பானங்களைக் குடிப்பதால், உடலில் உள்ள சூடு குறையும். மேலும் இதில் இருக்கும் சத்துக்கள் சிறுநீர்ப் பாதையில் இருக்கும் நோய்த்தொற்றை விரைவாகக் குறைக்க உதவும்.
- எண்ணெய் அடிவயறில் விளக்கெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய்யைப் பூசி, மென்மையாகத் தடவி விடலாம்.
- நீர்ச்சத்து நிறைந்த காய் கனிகள் வெள்ளரி,தர்பூசனி,புடலங்காய்,பீர்க்கங்காய் அதிகம் எடுத்துக் கொள்ளலாம்.இது நோயிலிருந்து விடுபட வழி புரியும்.
சிறுநீர்ப் பாதை நோய்த் தொற்று ஏற்பட காரணம் என்ன? அதனை எப்படி சரி செய்யலாம்? -
Reviewed by Author
on
February 16, 2020
Rating:
No comments:
Post a Comment