மன்னார் பிரிமீயர் லீக்' உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டி -5 ஆம் நாள் சுற்றில் -மன்னார் லயன்ஸ் உதைபந்தாட்ட கழகம் வெற்றி....
மன்னார் மாவட்ட உதைப்பந்தாட்ட சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மன்னார் பிரிமீயர் லீக் உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியின் 5 ஆம் நாள் போட்டிகள் நேற்று வியாழக்கிழமை(20) இரவு 7.30 மணியளவில் மின் ஒளியில் மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்றது.
'மன்னார் பிரிமீயர் லீக்' தலைவரும், இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் உப தலைவரும்,மன்னார் நகர முதல்வருமான ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தலைமையில் குறித்த நிகழ்வு இடம் பெற்றது.
குறித்த உதைபந்தாட்ட போட்டியானது ஈடன் உதைபந்தாட்ட கழகத்திற்கும், மன்னார் லயன்ஸ் உதை பந்தாட்ட கழகத்திற்கும் இடையில் போட்டி இடம் பெற்றது.
முதலில் போட்டி ஆரம்பமாகி 4, 49 ஆவது நிமிடங்களில் மன்னார் லயன்ஸ் உதை பந்தாட்ட கழக வீரர், ஏ.பி.சி.ஏ.றோச் 2 கோல்களையும், 10 ஆவது நிமிடத்தில் ரி.ராஜ் கமல் மேலும் ஒரு கோலையும்,40 ஆவது நிமிடத்தில் ஏ.ஜே.மாக்கஸ் ஒரு கோலையும், 53 ஆவது நிமிடத்தில் பி.றோட்னி ஒரு கோலையும் அடித்தனர்.
மன்னார் லயன்ஸ் உதை பந்தாட்ட கழகம் 5 கோல்களை போட்டுள்ளனர்.
அதே நேரம் ஈடன் உதைபந்தாட்ட கழக வீரரான ஏ.லக்ஸன் 85 ஆவது நிமிடத்தில் ஒரு கோலை அடித்தார்.
-இந்த நிலையில் மன்னார் லயன்ஸ் உதைபந்தாட்ட கழகம் 5:1 என்ற கணக்கில் வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.
'மன்னார் பிரிமீயர் லீக்' தலைவரும், இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் உப தலைவரும்,மன்னார் நகர முதல்வருமான ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தலைமையில் குறித்த நிகழ்வு இடம் பெற்றது.
குறித்த உதைபந்தாட்ட போட்டியானது ஈடன் உதைபந்தாட்ட கழகத்திற்கும், மன்னார் லயன்ஸ் உதை பந்தாட்ட கழகத்திற்கும் இடையில் போட்டி இடம் பெற்றது.
முதலில் போட்டி ஆரம்பமாகி 4, 49 ஆவது நிமிடங்களில் மன்னார் லயன்ஸ் உதை பந்தாட்ட கழக வீரர், ஏ.பி.சி.ஏ.றோச் 2 கோல்களையும், 10 ஆவது நிமிடத்தில் ரி.ராஜ் கமல் மேலும் ஒரு கோலையும்,40 ஆவது நிமிடத்தில் ஏ.ஜே.மாக்கஸ் ஒரு கோலையும், 53 ஆவது நிமிடத்தில் பி.றோட்னி ஒரு கோலையும் அடித்தனர்.
மன்னார் லயன்ஸ் உதை பந்தாட்ட கழகம் 5 கோல்களை போட்டுள்ளனர்.
அதே நேரம் ஈடன் உதைபந்தாட்ட கழக வீரரான ஏ.லக்ஸன் 85 ஆவது நிமிடத்தில் ஒரு கோலை அடித்தார்.
-இந்த நிலையில் மன்னார் லயன்ஸ் உதைபந்தாட்ட கழகம் 5:1 என்ற கணக்கில் வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.

மன்னார் பிரிமீயர் லீக்' உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டி -5 ஆம் நாள் சுற்றில் -மன்னார் லயன்ஸ் உதைபந்தாட்ட கழகம் வெற்றி....
Reviewed by Author
on
February 22, 2020
Rating:

No comments:
Post a Comment