குற்றவாளிகளை எப்போதும் தூக்கிலிட முடியாது என அவர் சவால் விடுகிறார்! நிர்பயா தாய் கண்ணீருடன் கூறிய தகவல் -
நிர்பயா வழக்கின் குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங்கின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்ததால், இந்த வழக்கில் தண்டனை பெற்ற 4 பேரையும் இன்று காலை தூக்கிலிட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதனிடையே, குற்றவாளிகளில் ஒருவரான பவன் குப்தா, குற்றம் நடந்த போது தான் மைனர் என்பதால், தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தர். இந்த மனுவும் நேற்று முன்தினம் தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்நிலையில், குற்றவாளிகளில் ஒருவரான வினய் சர்மா குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பியுள்ளதாக, அவரது வழக்கறிஞர் தெரிவித்தார். இந்த தகவல் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டதால், மறு உத்தரவு வரும் வரை 4 பேருக்கும் தூக்கு தண்டனையை நிறைவேற்ற தடைவிதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதுதொடர்பான வழக்கு விசாரணையின் டெல்லி நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது நீதிமன்றத்தில் இருந்த நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி, தூக்கிலிட தடை என்ற உத்தரவை கேட்டு அங்கேயே கதறி அழுதார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், நீதி மன்றங்களும் அரசாங்கமும் இந்த குற்றவாளிகள் முன் தலை குனிந்து கொண்டு இருக்கின்றன. நாங்கள் ஏமாற்றத்தை சந்தித்து வருகிறோம்.
காலை 10 மணி முதல் இங்கே உட்கார்ந்திருக்கிறேன். நீதிமன்றம் இந்த குற்றவாளிகளை தண்டிக்க விரும்பினால், ஏன் இவ்வளவு நேரம் எடுக்க வேண்டும்?
நியாயம் கிடைக்கும் என்று நம்பிக்கையுடன் காத்திருந்தோம். ஆனால் குற்றவாளிகளின் வழக்கறிஞர் ஏ.பி.சிங் என்னிடம் 4 பேரை தூக்கில் இருந்து காப்பாற்றுவேன் என சவால் விடுக்கிறார்.
ஒருபோதும் அவர்களை தூக்கிலிட முடியாது என்றும் கூறுகிறார். இனியும் அரசு தாமதிக்காமல் 4 பேருக்கும் தூக்கு தண்டனையை நிறைவேற்ற வேண்டும்
அவர்களை தூக்கிலிடும் வரை தொடர்ந்து போராடுவேன் என கண்ணீருடன் கூறியுள்ளார்.
குற்றவாளிகளை எப்போதும் தூக்கிலிட முடியாது என அவர் சவால் விடுகிறார்! நிர்பயா தாய் கண்ணீருடன் கூறிய தகவல் -
Reviewed by Author
on
February 01, 2020
Rating:
No comments:
Post a Comment