பிரதமர் பதவியை இலக்கு வைக்கும் மூன்று அமைச்சர்கள் -
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தின் அடுத்த பிரதமர் பதவியை இலக்கு வைத்து மூன்று அமைச்சர்கள் போட்டியில் இறங்கியுள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது 75 வயதாகும் மகிந்த ராஜபக்ச 2025 அல்லது அதற்கு முன்னர் அரசியலில் இருந்து ஓய்வுபெறுவார் என எதிர்பார்க்கப்படுவதால், 2020 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் அடுத்த பிரதமர் பதவிக்கு தாம் தகுதியானவர்கள் என நிரூபிக்க இவர்கள் தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனடிப்படையில், அதிகமான விருப்பு வாக்குகளை பெற்றுக்கொள்வது, அதிக விருப்பு வாக்குகளை பெற்று சாதனை படைப்பது, ஊடகங்களை கூடுதலாக கவர்வது ஆகியவற்றை இலக்கு வைத்து இவர்கள் இந்த போட்டியில் இறங்கியுள்ளனர்.
இவர்கள் தற்போது கவர்ச்சிகரமான தலைப்புகளின் கீழ் பிரசார நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதுடன் ஒரு அமைச்சர் பிரபல பாடகரின் பிரசார நிறுவனத்தின் உதவியை பெற்றுக்கொள்ள உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
பிரதமர் பதவியை இலக்கு வைக்கும் மூன்று அமைச்சர்கள் -
Reviewed by Author
on
February 08, 2020
Rating:

No comments:
Post a Comment