சிங்களப்பகுதிகளில் சோதனை செய்வதற்கு இந்த அரசாங்கம் தயாரா? செல்வம் எம்.பி கேள்வி -
தற்போதைய அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதனூடாக தமிழர் பகுதிகளில் இராணுவ காவலரண்களையும் சோதனைச் சாவடிகளையுமே அதிகரிக்க முடியும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு அவர் இன்றைய விடுத்துள்ள செய்திக்குறிப்பில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த அறிக்கையில்,
வட மாகாணம் இன்று இராணுவ பிரசன்னம் அதிகரித்த மாகாணமாக காட்சியளிக்கின்றது. இந்த அரசாங்கம் ஆட்சிப்பீடமேறிய கையோடு அதிகளவான இராணுவ சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு தமிழ் மக்கள் நாள்தோறும் இம்சிக்கப்படும் நிலை காணப்படுகின்றது.
வடக்கில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் ஓமந்தை, கொள்ளர் புளியங்குளம், மாங்குளம், ஆனையிறவு என அனைத்து இடங்களிலும் சோதனைக்குட்படுத்தப்படுவதுடன் மக்களும் பேருந்துகளில் இருந்து இறக்கி ஏற்றும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றது.
இவ்வாறான நிலையை சிங்களப்பகுதிகளில் செய்வதற்கு இந்த அரசாங்கம் தயாரா? மதவாச்சியில் வைத்து சோதனை செய்து காட்டட்டும். சிங்கள மக்கள் தமக்கு எதிராக கொந்தளிப்பார்கள் என்ற அச்சம் காரணமாகவே இந்த அரசாங்கம் தமிழர் பகுதிகளில் இவ்வாறான இராணுவ சோதனைச்சாவடிக்களை அமைத்து தமிழ் மக்களை இன்னல்படுத்துகின்றது.
எனவே எதிர்வரும் காலங்களில் இந்த அரசாங்கத்திற்கு ஆதரவானவர்களையும் அவர்களின் ஆதரவாளர்களையும் மக்கள் பிரதிநிதிகளாக தமிழர்கள் உருவாக்குவார்களேயானால் இராணுவ சோதனைச்சாவடிகளே மிச்சமாக இருக்கும் என்பதனை எமது தமிழ் மக்கள் உணர வேண்டும்.
எப்போதும் தமிழ் மக்களுக்கான துணையாக இருக்கப்போவது தமிழ் தேசியக் கூட்டமைப்பினரே என்பதனை மக்கள் காலத்திற்கு காலம் உணர்த்தி வரும் நிலையிலேயே தற்போதைய ஆட்சியாளர்கள் தமிழ் மக்களை இராணுவத்தினரை கொண்டு அச்சுறுத்த ஆரம்பித்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
சிங்களப்பகுதிகளில் சோதனை செய்வதற்கு இந்த அரசாங்கம் தயாரா? செல்வம் எம்.பி கேள்வி -
Reviewed by Author
on
February 14, 2020
Rating:

No comments:
Post a Comment