இலங்கை முழுவதும் 40,000 போலி மருத்துவர்கள் .....
நாடு முழுவதும் தம்மை மருத்துவர்கள் எனக் கூறிக்கொண்டு 40 ஆயிரம் போலி மருத்துவர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து வருவதாக தெரியவந்துள்ளது என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த போலி மருத்துவர்களில் 10 ஆயிரம் பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் மருத்துவர் ஹரித்த அளுத்கே இன்று தெரிவித்துள்ளார்.
அடையாளம் காணப்பட்டுள்ள நபர்கள் தொடர்பில் அவசியமான அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்காக அவர்களின் தகவல்கள் சட்டமா அதிபர் திணைக்களம்,பொலிஸ் திணைக்களம், சுகாதார அமைச்சின் சட்டப் பிரிவு , ஆங்கில, ஆயுர்வேத மற்றும் ஹோமியோபதி ஆகிய மருத்துவ சபைகளின் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மருத்துவர்களாக செயற்படும் இந்த நபர்களுக்கு அதற்கான எந்த தகுதியும் இல்லை. ஆங்கில மருத்துவம், ஆயுர்வேதம் மற்றும் ஹோமியோபதி ஆகிய மருத்துவ சபைகளின் கீழ் கற்றறிந்த சிகிச்சை முறைகளுக்கு பதிலாக வேறு முறைகளை பயன்படுத்தி சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள், தாதி அதிகாரிகள் உட்பட சுகாதார சேவையில் உள்ள பணியாளர்கள் இருக்கின்றனர்.
எனினும் இல்லாத தகுதியை காண்பித்து மருத்துவ சேவையில் ஈடுபடும் நபர்களாக இவர்களை வகைப்படுத்தலாம்.
போலி மருத்துவர்களை ஒழிப்பதற்காக சட்டத்தை வலுப்படுத்தி, தகுதிகள் இன்றி நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து குற்றவாளியாக இனங்காணப்படும் நபருக்கு 10 லட்சம் ரூபாய் அபராதமும் ஐந்தாண்டு சிறை தண்டனை கிடைக்கும் வகையில் புதிய சட்டத்தை உருவாக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றோம் என ஹரித அளுத்கே குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை முழுவதும் 40,000 போலி மருத்துவர்கள் .....
Reviewed by Author
on
February 18, 2020
Rating:

No comments:
Post a Comment