சுவிஸில் மாயமான தமிழர் சடலமாக மீட்பு -படம்
சுவிட்சர்லாந்தில் கடந்த 30 ஆண்டுகளாக குடியிருந்து வந்தவர் தற்போது 55 வயதாகும் உதயகுமார் ராயரட்னம்.
இவரையே கடந்த டிசம்பர் 12 ஆம் திகதி முதல் காணவில்லை என உறவினர்களால் பொலிசாரிடம் புகார் அளிக்கப்பட்டது.
குறித்த நபரைத் தேடும் பணியினை முன்னெடுத்த காவல்துறையினருக்கும் ஏமாற்றமே மிஞ்சிய நிலையிலும் அவரை தேடுவதற்கான முயற்சிகள் கைவிடப்படாது என அறிவித்திருந்தனர்.
இந்த நிலையில் வெள்ளிக்கிழமை ரைனில் இருந்து உதயகுமார் ராயரட்னம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நதி மின் நிலைய ஊழியர்கள் சிலர் இவரது உடலைக் கண்டுபிடித்தனர். இதை Aargau மண்டல பொலிசார் சனிக்கிழமை அறிவித்தனர்.
மூன்று பிள்ளைகளின் தந்தையான உதயகுமார் ராயரட்னத்தின் மறைவு அவரது குடும்பத்தை மொத்தமாக உலுக்கியுள்ளது.
விரைவில் நல்ல தகவல் வரும் என இத்தனை நாளும் காத்திருந்ததாக கூறும் அவரது குடும்பத்தினர், ஆனால் அவரை சடலாமாக பார்ப்போம் என எவரும் கருதவில்லை என கண்கலங்கியுள்ளனர்.
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டும் குடியிருப்புக்கு திரும்பாத நிலையில், ஜனவரி மாதம் முழுவதும் மிக தீவிரமாக தேடி வந்துள்ளனர்.
என்ன நடந்தது என்று எங்களுக்குத் தெரியவில்லை. இருப்பினும் விபத்து, கொலை அல்லது தற்கொலை உள்ளிட்ட எதையும் தற்போதைய சூழலில் நிராகரிக்கவில்லை என ராயரட்னத்தின் உறவினர் ஒருவர் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
உடற்கூராய்வு எதிர்வரும் வாரம் நடைபெறும் என கூறப்படுகிறது, அதன் பின்னரே உண்மை நிலை தெரியவரும் என கூறும் உறவினர்கள்,
அதன் பின்னரே இறுதிச்சடங்குகள் நடத்த முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
சுவிஸில் மாயமான தமிழர் சடலமாக மீட்பு -படம்
Reviewed by Author
on
February 02, 2020
Rating:

No comments:
Post a Comment