வட்டக்கச்சி பாடசாலைக்கான திறன் வகுப்பறை மாணவர் பாவனைக்காக கையளிப்பு -
கிளிநொச்சி வட்டக்கச்சி ஆரம்ப வித்தியாலயத்திற்கான திறன் வகுப்பறை இன்று மாணவர் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.
குறித்த நிகழ்வு இன்று காலை 11.30 மணியளவில் பாடசாலை முதல்வர் அ.பங்கையற்செல்வன் தலைமையில் இடம்பெற்றது.
தேசிய கொள்கைகள் பொருளாதார விவகாரங்கள், மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வளிப்பு வடமாகாண அபிவிரு்ததி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் குறித்த திறன் விருத்தி வகுப்பறை அமைக்கப்பட்டுள்ளது.
குறித்த வகுப்பறையினை நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் திறந்து வைத்தார். குறித்த நிகழ்வில் கோட்டக்கல்வி அதிகாரி, அயல்பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் திறன் விருத்தி வகுப்பறையின் செயற்பாடுகளை கோட்டக்கல்வி அதிகாரி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் ஆகியுார் ஆரம்பித்து வைத்தனர்.
தொடர்ந்து மாணவர்களின் மாதிரி திறன் விருத்தி வகுப்பறை இடம்பெற்றது. பாடசாலை மாணவர்கள் உட்சாகத்துடன் குறித்த வகுப்பறையினை பயன்படுத்தியமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
சர்வதேச கல்வி முறை நோக்கி மாணவர்களை அழைத்து செல்லும் நோக்குடன் அனை்தது பாடசாலைகளிலும் இவ்வாறான திறன் விருத்தி வகுப்பறைகள் படிப்படியாக அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
வட்டக்கச்சி பாடசாலைக்கான திறன் வகுப்பறை மாணவர் பாவனைக்காக கையளிப்பு -
Reviewed by Author
on
February 14, 2020
Rating:

No comments:
Post a Comment