உலகில் அதிக வயதுடன் வாழும் நபர்! உலக சாதனையாக அறிவிப்பு -
1907ஆம் ஆண்டு மார்ச் 5ஆம் திகதி பிறந்த சிட்டிசு வடனாபே என்பவரே உலகின் அதிக வயதான மனிதர் என்று கின்னஸ் சாதனை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
இந்த மனிதர் இன்னுமும் நலமுடன் வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமது தந்தை வயதைப்பற்றி கவலைப்படவில்லை என்று அவரின் 78 வயதான மகள் டேருகோ டக்ஹாசி தெரிவித்துள்ளார்.
2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 113 வயதில் இறந்த ஜப்பானின் மசாஸூ நொனாகாவே அதிக வயதானவராக அங்கீகரிக்கப்பட்டிருந்தார்.
தற்போது அதிக வயதானவர் என்ற அங்கீகரிக்கப்பட்டுள்ள ஜோட்சு வடானாபே தமது 20 வயதில் தாய்வானுக்கு சென்று குடியேறினார்.
18 வருடங்களின் பின்னர் அவர் மீண்டும் ஜப்பானுக்கு சென்று குடியேறினார். இரண்டாம் உலகப் போரின் பின்னர் தாம் இளையாறும் வரை வடானாபே பொதுசேவையாளராக பணிபுரிந்தார். இவருக்கு ஐந்து பிள்ளைகளும் 12 பேரப்பிள்ளையும் 16 கொள்ளுப் பேரப்பிள்ளைகளும் உள்ளனர்.
ஜப்பானில் ஏற்கனவே 117 வயதான பக்குவோடா ப்ரிபேக்சர் என்பவர் 2018 இல் உலகின் அதிக வயதானவர் என்ற பெருமையை பெற்றிருந்தார்.
இதன்பின்னர் 117 வயதான சியோ மியாகோ என்ற பெண் 117 வயது வரை வாழ்ந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
உலகில் அதிக வயதுடன் வாழும் நபர்! உலக சாதனையாக அறிவிப்பு -
Reviewed by Author
on
February 14, 2020
Rating:

No comments:
Post a Comment