வடக்கில் கட்டுப்பணம் செலுத்தியுள்ள 10 சுயேட்சை குழுக்கள்!
நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வடக்கின் இரு தேர்தல் மாவட்டங்களிலும் இதுவரை 10 சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன.
யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் ஆறு சுயேட்சைக் குழுக்களும், வன்னித் தேர்தல் மாவட்டத்தில் 4 சுயேட்சைக் குழுக்களும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன.
வன்னியில் கட்டுப்பணம் செலுத்தியவர்களில் நடராசா தலைமையிலான ஓர் தமிழ் குழுவும், 3 சிங்கள குழுக்களும் பணம் செலுத்தியுள்ளன.
யாழ்ப்பாணத்தில் விமல்தாஸ் மயில்வாகனம், பொன்னுத்துரை ஐங்கரநேசன், வில்லியம் விக்டர் அன்ரனி, ஆழ்வார்பிள்ளை குருகுலன், அஹமட் சுபியான், முருகேசு சந்திரகுமார் ஆகியோர் தலைமையிலான குழுவினர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.
வடக்கில் கட்டுப்பணம் செலுத்தியுள்ள 10 சுயேட்சை குழுக்கள்!
Reviewed by Author
on
March 08, 2020
Rating:

No comments:
Post a Comment