யாழ்.கல்வி வலயத்தின் நான்கு பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு எந்தவொரு மாணவர்களும் சேர்க்கப்படவில்லை! -
யாழ்ப்பாணம் கல்வி வலயத்தில் தரம் 1இல் மாணவர்களை இணைக்கத் தகுதியான 104 பாடசாலைகளிலும் 2731 மாணவர்கள் இணைந்துள்ள போதும் 38 பாடசாலைகளில் 10 இற்கும் குறைந்த மாணவர்களே இணைந்துள்ளனர்.
வடக்கு மாகாணத்தின் 12 கல்வி வலயங்களில் ஒன்றான யாழ்ப்பாணம் கல்வி வலயத்தின் கீழ் 2020ம் ஆண்டில் தரம் 1இல் இணைந்த மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையிலேயே இந்த எண்ணிக்கை கணக்கிடப்பட்டுள்ளது.
இதில் 38 பாடசாலைகளில் 10 இற்கும் குறைந்த மாணவர்கள் காணப்படும் அதேநேரம் 23 பாடசாலைகளில் 5 இற்கும் குறைந்த எண்ணிக்கையான மாணவர்களே இணைந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இதே நேரம் 4 பாடசாலைகளில் எந்தவொரு மாணவரும் இணைத்துக் கொள்ளப்படவில்லை.
பிரபல பாடசாலைகளில் 10 இல் மட்டும் 1388 மாணவர்கள் இணைக்கப்பட்டுள்ள நிலையில், எஞ்சிய 94 பாடசாலைகளில் 1343 மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழ்.கல்வி வலயத்தின் நான்கு பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு எந்தவொரு மாணவர்களும் சேர்க்கப்படவில்லை! -
Reviewed by Author
on
March 08, 2020
Rating:

No comments:
Post a Comment