2020ஆம் ஆண்டு இதுவரை வெளிவந்த படங்களின் டாப் லிஸ்ட்,
தமிழில் மட்டுமல்லாமல் எந்த மொழியில் ஒரு படம் வெளிவந்தாலும் அதில், ரசிகர்கள் குறிப்பாக பார்ப்பது அப்படம் பாக்ஸ் ஆபிசில் எந்த அளவிற்கு சென்றுள்ளது என்று தான்.
அதிலும் தமிழில் வெளியாகும் படங்களுக்கு சொல்லவே தேவையில்லை. ரஜினி, அஜித், விஜய் போன்ற நடிகர்களின் படங்கள் என்றால் அனைவரும் முதலில் எதிர்பார்ப்பது படத்தின் வசூல் நிலவரம் தான.
அந்த அளவிற்கு இவர்களின் படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இவர்களை தவிர்த்து வேறு நடிகர்களின் படங்களுக்கும் தற்போது ரசிகர்கள் பாக்ஸ் ஆபிஸை பார்க்க துவங்கிவிட்டனர்.
சென்ற வருடம் வெளிவந்த பிகில், விஸ்வாசம், பேட்ட திரைப்படங்கள் பாக்ஸ் ஆபிசில் மிக பெரிய வரவேற்பை அடைந்தது. ஆனால் அதே நேரத்தில் சென்ற ஆண்டு வெளிவந்த தனுஷின் அசுரன் படமும் கார்த்தியின் கைதி படமும் பாக்ஸ் ஆபிசில் 100 கோடி வசூல் செய்து மிக பெரிய சாதனையை உருவாக்கியது.
இந்நிலையில் இந்த ஆண்டு வெளிவந்த படங்களில் இதுவரை சென்னை சிட்டி பாக்ஸ் ஆபிஸ் நிலவரத்தை பார்ப்போம்.
1. தர்பார் - 15.01 கோடி
2. பட்டாஸ் - 2.83 கோடி
3. ஓ மை கடவுளே - 2.43 கோடி
4. சைக்கோ - 2.41 கோடி
5. கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் - 1.13 கோடி
6. AlaVaikunthapurramuloo - 1.1 கோடி
7. SarileruNeekevvaru - 1.05 கோடி
8. டகால்டி - 65 லட்சம்
9. டாணா - 18 லட்சம்
2020ஆம் ஆண்டு இதுவரை வெளிவந்த படங்களின் டாப் லிஸ்ட்,
Reviewed by Author
on
March 07, 2020
Rating:

No comments:
Post a Comment