30 ஆண்டுகளாக பழையவற்றை மறந்திருந்த புலம்பெயர் தொழிலாளி: கொரோனாவால் நடந்த அதிசயம்! -
சீனாவை சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளி ஜு ஜியாமிங் என்பவர், தென் மேற்கு மாகாணமான புஜியனில் கட்டுமான வேலைகளைத் தேடுவதற்காக கடந்த 30 ஆண்டுகளுக்கு தனது குடும்பத்தை விட்டு வெளியேறினார்.
ஒருநாள் வேலை செய்துகொண்டிருந்த இடத்தில் நடந்த விபத்தில் தலையில் காயம் ஏற்பட்டு, பழையவற்றை அனைத்தையும் ஜு மறந்ததால், வீட்டிற்கு செல்ல முடியாமல் தவித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் தொலைக்காட்சியில் வைரஸ் பற்றி பார்த்துக்கொண்டிருந்த அவருக்கு திடீரென தனது சொந்த ஊரின் பெயர் நினைவுக்கு வந்துள்ளது.

இதனையடுத்து தகவல் அறிந்த உள்ளூர் பொலிஸார், அவரது குடும்பத்தினருடன் தொடர்பு கொள்ள உதவி செய்தனர். மேலும், அவரது குடும்பத்தினருடன் விரைந்து இணைக்க திட்டமிட்டுள்ளனர்.
'நான் உன்னை மீண்டும் ஒருபோதும் பார்க்க மாட்டேன் என்று நினைத்தேன்,' என்று திரு ஜுவின் தாயார், 83, கண்ணீருடன் இருவரும் பேசிய வீடியோ அழைப்பில் கூறியுள்ளார்.


30 ஆண்டுகளாக பழையவற்றை மறந்திருந்த புலம்பெயர் தொழிலாளி: கொரோனாவால் நடந்த அதிசயம்! -
Reviewed by Author
on
March 12, 2020
Rating:
No comments:
Post a Comment