கொரோனா தொற்றிலிருந்து தப்பிக்க கைகளை கழுவும் சரியான முறை இதுதான் -
இந்நிலையில் உலக சுகாதார நிறுவனம் கை கழுவும்போது எவ்வாறான படிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்ற தகவலை தற்போது வெளியிட்டுள்ளது.
இதன்படி முதலில் கைகளை ஓடும் நீரில் நன்றாக நனைக்க வேண்டும்.
அதன் பின்னர் தொற்றுநீக்கக்கூடிய சவர்க்காரத்தினை இட வேண்டும். இதன்போது நீர்க்குழாயினை தொடுவதை தவிக்க வேண்டும்.
இதன்போது சவர்க்காரமானது நக இடுக்குகள், விரல்கள் என கைகளில் அனைத்து இடங்களிலும் பரந்து இருப்பதை உறுதிப்படுத்தவும்.
மேலும் சுமார் 20 செக்கன்கள் வரை நன்றாக தேய்க்கவும்.
மீண்டும் ஓடும் நீரில் கைகளை நன்றாக கழுவவும். பின்னர் ஒரு தடவை மாத்திரம் பயன்படுத்தக்கூடிய ரிசுக்களைக் கொண்டு கைகளை நன்றாக உலர்த்தவும்.
கொரோனா தொற்றிலிருந்து தப்பிக்க கைகளை கழுவும் சரியான முறை இதுதான் -
Reviewed by Author
on
March 15, 2020
Rating:

No comments:
Post a Comment