அசுரவேகம் எடுக்கும் கொரோனா வைரஸ்! கனடா மற்றும் ஜேர்மனியில் முதல் பலி -
இதன்படி, கனடாவில் வடக்கு வன்கூவரில் ஒருவர் கொரோனா வைரஸிற்கு பலியாகியிருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Lynn Valley பராமரிப்பு மையத்தில் பதிவாகியுள்ள இந்த மரணம், கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான முதல் மரணம் என்று நம்பப்படுகிறது.
இதனிடையே, ஐரோப்பிய நாடான ஜேர்மனியில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆயிரத்து 112 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை, சீனாவின் ஹூபேய் மாகாணத்தில் கடந்த டிசம்பர் மாதம் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் 110க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது.
இந்த வைரஸ் தொற்றினால் உலகம் முழுவதும் 3800க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதுடன், 110,000க்கும் மேற்பட்டோருக்கு பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அசுரவேகம் எடுக்கும் கொரோனா வைரஸ்! கனடா மற்றும் ஜேர்மனியில் முதல் பலி -
Reviewed by Author
on
March 10, 2020
Rating:

No comments:
Post a Comment