அண்மைய செய்திகள்

recent
-

தமிழ் தேசியக்கூட்டமைப்பு மக்களை 'கொரோனா வைரஸ்' தொற்றில் இருந்து பாதுகாக்க விழிர்ப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.முன்னாள் எம்.பி.செல்வம் அடைக்கலநாதன்.

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வேட்பாளர்களுக்கும்,தொண்டர்களுக்கும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்,டெலோ கட்சியின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (20) அவசர வேண்டுகோள் ஒன்றை முன் வைத்துள்ளார்.

இவ்விடையம் தொடர்பாக அவர் மேலும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,,

பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்துள்ள நிலையில் தற்போது எமது முக்கிய நோக்கமாக 'கொரோனா வைரஸ்' தொற்றை கட்டுப்படுத்தி மக்களை காப்பாற்றுவதற்கான பொறுப்பும் கடமையும் எங்களைச் சார்ந்தது என்கின்ற அடிப்படையில் தேர்தல் பிற்போடப்பட்டுள்ளமையினால் எங்களினுடைய தேர்தல் பரப்புரைக்கு பதிலாக 'கொரோனா வைரஸ்' தாக்கத்தில் இருந்து மக்களை பாதுகாக்கும் நோக்குடன் மக்களுக்கு விழிர்ப்புணர்வை ஏற்படுத்துகின்ற செயல் பாட்டை மேற்கொள்ள வேண்டும்.

-தமிழ் தேசியக்கூட்டமைப்பினராகிய நாங்கள் எமது மக்களின் அனைத்து விடையங்களிலும் கவனம் செலுத்துகின்றவர்களாக இருக்கின்றோம்.அந்த வகையிலே இந்த விடையத்திலும் நாங்கள் எங்களுடைய கடமைகளை சரியாக செய்ய வேண்டும்.

-அவசர நிலை பிரகடனத்தில் எப்படி செயல் பட வேண்டுமோ அவ்வாறான நிலையை பின் பற்றி கிராம ரீதியாக எங்களுடைய மக்களுக்கு விழிர்ப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.அந்த வகையில் தேர்தல் பிரச்சார வியூகங்களை மாற்றி 'கொரோனா வைரஸ்' தொற்றில் இருந்து விடுதலை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்துவதற்கான செயல்பாட்டை தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வேட்பாளர்களும்,தொண்டர்களும் முன்னெடுக்க வேண்டும்.

தேர்தல் பிரச்சாரங்களை ஒதுக்கி விட்டு மக்கள் மத்தியில் கொரோனா வைரஸில் இருந்து பாது காப்பது தொடர்பில் விழிர்ப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.

-மேலும் நாட்டில் தற்போது அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சில வற்றிற்கு விலை குறைக்கப்பட்டுள்ளது.

ஆனால் அன்றாடம் உழைத்து குடும்பங்களை வழி நடத்துகின்றவர்கள் இதனால் சரியான பலனை அடையவில்லை.இவ்விடையத்தில் ஜனாதிபதி கவனம் செலுத்த வேண்டும்.

தற்போதைய அரசாங்கம் இவ்விடையத்தில் கவனம் செலுத்த வேண்டும்.அன்றாடம் உழைக்கின்ற  அல்லது சமூர்த்தி பயணாளிகள் மற்றும் வறுமைக்கோட்டிற்கு உற்பட்ட மக்களுக்கு இச் சலுகைகள் போய் சேர வேண்டும்.

-தற்போதைய சூழ்நிலையில் தொழில் நடவடிக்கைகளும் தடைப்பட்டுள்ளது. அவர்கள் அன்றாடம் தமது குடும்ப செலவீனங்களை முன்னெடுத்துச் செல்ல பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.அதந்த மக்களின் நலனில் ஜனாதிபதியும்,பிரதமரும் அக்கரை செலுத்தவில்லை.குறித்த நடவடிக்கையினால் சாதாரண மக்கள் பாதீக்கப் படுகின்றனர்.

எனவே பாதிக்கப்படுகின்ற மக்களுக்கும் விலை குறைப்புச் செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் சென்றடைய வேண்டும்.எனவே கூட்டுறவுச் சங்கத்தினூடாக அந்த பொருட்கள் சென்றடைய அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.என அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழ் தேசியக்கூட்டமைப்பு மக்களை 'கொரோனா வைரஸ்' தொற்றில் இருந்து பாதுகாக்க விழிர்ப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.முன்னாள் எம்.பி.செல்வம் அடைக்கலநாதன். Reviewed by Author on March 21, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.