'கொரோனா வைரஸ்'தொடர்பில் சுகாதார அமைச்சின் அறிவுறுத்தல்களை- வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன்-
அரசாங்கத்தினதும், சுகாதார அமைச்சினுடையதும் அறிவுரைகளை பின் பற்றி 'கொரோனா வைரஸ்' நோயை எந்த அளவுக்கு எங்களுக்குள் பரவாமல் இருக்க பாதுகாத்துக் கொள்வதில் தான் எங்களுடைய வெற்றி தங்கி உள்ளது.
எனவே சுகாதார அமைச்சினால் விடுக்கப்படுகின்ற அறிவுறுத்தல்களை நாங்கள் கடைபிடிப்பது மிக சிறந்தது என வடமாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் தெரிவித்தார்.
அவர் மேலும் 22-03-2020 ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,,,.
'கொரோனா' வைரஸின் தாக்கம் தற்போது இலங்கையிலும் பரவி ஒரு அவல நிலையை ஏற்படுத்தி எமது நாட்டை இக்கட்டான நிலையில் தத்தளிக்கின்றது.
உலகலாவிய ரீதியில் பல நாடுகளில் குறித்த வைரஸ் தாக்கத்தை ஏற்படுத்தி தற்போது இலங்கையினுள் உற் புகுந்துள்ளது.
குறித்த நோயின் தாக்கம்,எவ்வாறு பாதுகாத்து கொள்வது போன்ற பல்வேறு விடையங்கள் இணையத்தளங்கள் மற்றும் பத்திரிக்கைகள் ஊடாக மக்களை சென்றடைந்து கொண்டு இருக்கின்றது.
எனினும் எமது இலங்கை நாட்டை பொறுத்தவரையில் குறித்த நோயை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கு எமது மக்களின் நடவடிக்கைகள் எவ்வாறு அமைய வேண்டும் என்பது தொடர்பில் கூடுதலான கவனம் செலுத்த வேண்டும்.
இது ஒரு வைரஸின் தொற்று.இதற்கு மருந்து கண்டு பிடிக்கப்படுவது இல்லை. அதிகலவான வைரஸிற்கு மருந்துகள் இல்லை.ஆனால் தடுப்பு மருந்துகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸிற்கு மருத்துவ ரீதியில் இது வரை மருந்து கண்டு பிடிக்கப்படவில்லை.தடுப்பு மருந்தும் கண்டு பிடிக்கப்படவில்லை.
கொரோனா வைரஸானது ஒருவரில் இருந்து இன்னும் ஓர் நபருக்கு பரவுவது தொடுகை முலமே பரவுகின்றது.
நோய் உள்ளவர் இன்னும் ஓர் நபரை தொடும் போதும்,இருமும் போதும் உமிழ் நீருடன் சேர்ந்து இன்னும் ஓர் நபரின் சுவாசப் பையினுள் செல்கின்ற போது கூடுதலாக தொற்றுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக கூறப்படுகின்றது.
குறித்த வைரஸானது வயது முதிர்ந்தவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களை இலகுவாக தாக்குகின்றது. அவ்வாறானவர்களே இந்த நோயினால் அதிகம் பாதீக்கப்படுகின்றனர்.
வயது முதிர்ந்தவர்கள், ஏற்கனவே நோய் வாய் பட்டவர்கள்,நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள்,சிறுவர்கள்,கர்ப்பிணி தாய்மார்கள் போன்றவர்கள் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டிய நேரம் இதுவாக உள்ளது.
தங்களை அவர்கள் தற் பாதுகாத்து கொள்ள வேண்டிய தடுப்பு முறைகளை கடை பிடிக்க வேண்டியது மிகவும் அவசியமாக உள்ளது.
எமது நாட்டை பொறுத்தவரையில் பொருளாதாரத்தில் வசதி குறைந்த நாடாக இருக்கின்றது. பின்தங்கிய நாடாக இருக்கின்றது.அதே நேரத்தில் மருத்துவ வசதிகள் ஏனைய வளர்ச்சி அடைந்த ஐரோப்பிய நாடுகள் போன்று மருத்தவ வசதிகளை கொண்ட நாடு அல்ல.
உலகத்தில் அபிவிருத்தி அடைந்த பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைந்த நாடுகள் இன்று கொரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்த முடியாமல் தினறிக் கொண்டு இருக்கின்றனர்.
ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக்கான மக்கள் இதனால் பாதீக்கப்படுகின்றனர். உயிரிழக்கின்றனர்.
எங்களுடைய நாட்டை பொறுத்தவரையில் அந்த அளவுக்கு இவ்வளவு வைரஸ் தொற்று ஏற்படுமாக இருந்தால் ஏனைய நாடுகளை விட எமது நாட்டின் நிலமை மிக பயங்கரமாக இருக்கும்.எனவே எங்களை பொருத்தவரையில் வறும் முன் காப்பதுமட்டும் தான் மிகச்சிறந்த உபாயமாக இருக்கும்.
எனவே அரசாங்கத்தினதும், சுகாதார அமைச்சினுடையதும் அறிவுரைகளை பின் பற்றி இந்த நோயை எந்த அளவுக்கு எங்களுக்குள் பரவாமல் இருக்க பாதுகாப்பதில் தான் எங்களுடைய வெற்றி தங்கி உள்ளது.
எனவே சுகாதார அமைச்சினால் விடுக்கப்படுகின்ற அறிவுறுத்தல்களை நாங்கள் கடைபிடிப்பது மிக சிறந்தது. இயன்றவரைக்கும் தனி நபர் சுகாதாரம் மிக கவனமாக பேனப்பட வேண்டும்.
குறிப்பாக கை கழுவுவதில் இருந்து வெளியில் சென்று வருவது,குளிப்பது, ஆடைகளை தோய்த்து பயண்படுத்தவது உற்பட வீட்டிலும் தனி நபர் சுத்தம் பேனப்பட வேண்டும்.
வீட்டில் உள்ளவர்கள் தங்களுக்கிடையிலான நெருக்கத்தையும் குறைத்துக் கொள்ள வேண்டும்.தேவையற்ற விதத்தில் வெளியில் நடமாடும்,கூட்டம் கூடுதல் போன்றவற்றை தவிர்த்துக் கொள்ளுதல் வேண்டும்.
கட்டாயமாக அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற தேவை இல்லை.வீட்டுக்குள் இருப்பவர்களுக்கு தேவைப்படாது.
மருத்துவத்துரை, பொது சேவை, பிரச்சினையான இடங்களுக்குள் செல்பவர்கள் முகக்கவசம் அணிவது சிறந்தது. வைரஸ் தொடர்பில் தவறான தகவல்களும் பரப்பப்படுகின்றது.குறித்த வைரஸ் பாதீப்பிற்கு உள்ளான அணைவரும் இறந்து போவர்கள் என்பது தவறு.இந்தவைரஸ் தாக்கத்தில் இருந்து மீண்டு நாங்கள் மீண்டும் நமது சகஜ வாழ்க்கைக்கு செல்ல முடியும்.முக்கியமாக அது நோய் எதிர்ப்பு சக்தியில் தங்கி இருக்கின்றது.
சரியான நேரத்தில் நோயை கண்டு பிடித்து சிகிச்சை வழங்குவதில் இருக்கின்றது.நோயில் இருந்து தற்பாதுகாத்து கொள்வது என்பது மிக முக்கியமானது.
நாட்டின் நிலமையும்,வீட்டின் நிலமையும் சிந்தித்து தடுப்பது மிக முக்கியமானதாக உள்ளது. நோய் அறிகுறிகள் தென் படும் பட்சத்தில் உடனடியாக அவ்விடையம் தொடர்பான அறிவுரைகளை பின் பற்றிக் கொள்ள வேண்டும்.
எமது நாட்டின் மருத்துவ வசதி மட்டுப்படுத்தப்பட்ட அளவு இருப்பதினால் நோயின் தாக்கம் பரவாமல் இருக்க சகல நடவடிக்கைகளையும் மிக இருக்கமாக கடைபிடிப்பது தான் எமது நாட்டையும், எம்மையும் இந்த நோயில் இருந்து பாதுகாத்துக் கொள்ள மிக முக்கியமான நடவடிக்கையாக அமையும்.என அவர் மேலும் தெரிவித்தார்.

Reviewed by Author
on
March 23, 2020
Rating:

No comments:
Post a Comment