தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின்' மன்னார் மாவட்ட வேட்பாளராக வைத்திய கலாநிதி ஜீ. குணசீலன் போட்டி.
முன்னாள் வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தலைமையிலான 'தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின்' வன்னி மாவட்ட தேர்தல் தொகுதியின் மன்னார் மாவட்ட வேட்பாளராக வட மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஞானசீலன் குணசீலன் போட்டியிடுகின்றார்.
வட மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் ஞானசீலன் குணசீலன் தமிழீழ விடுதலை இயக்கம் டெலோ கட்சியின் சார்பில் கடந்த மாகாண சபை தேர்தலில் போட்டியிட்டார்.
பின்னர் வட மாகாண சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார்.பின்னர் வட மாகாண சபை அமைச்சர்கள் மீது ஊழல் மோசடி குற்றச்சாட்டின் அவர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் அவர்களினால் புதிய வடமாகாண அமைச்சர்கள் நியமிக்கப்பட்டனர்.
இதன் போது வட மாகாண சுகாதார அமைச்சராக இருந்த தமிழரசுக் கட்சியை சார்ந்த வைத்திய கலாநிதி பா.சத்தியலிங்கம் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக டெலோ கட்சியை சேர்ந்த வைத்திய கலா நிதி ஜீ.குணசீலன் முதலமைச்சரினால் நியமிக்கப்பட்டார்.
எனினும் குறித்த அமைச்சு பதவியை பெற்றுக்கொள்ள வேண்டாம் என டெலோ கட்சியின் தலைமைப்பீடம் குணசீலனிடம் அழுத்தங்களை பிரையோகித்தது.
எனினும் பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் வடக்கு சுகாதார அமைச்சராக பதவியேற்று கடமையாற்றி வந்தார்.இந்த நிலையில் ஆசனம் வழக்கிய டெலோ கட்சிக்கும்,அவருக்கும் இடையிலான தொடர்புகள் துண்டிக்கப்பட்டது.
இந்த நிலையில் இவ்வருடம் இடம் பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் முன்னாள் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான 'தமிழ் மக்கள் தேசிய கூட்டணி' சார்பாக மன்னார் மாவட்டத்தில் முன்னாள் வடமாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் நியமிக்கப்பட்ட நிலையில் அவர் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Reviewed by Author
on
March 16, 2020
Rating:

No comments:
Post a Comment