மன்னாரில் சிறப்பாக இடம் பெற்ற 'சிவதரிசனம்'மாதாந்த சைவ செய்திப் பத்திரிகை வெளியீடு-வீடியோ,போட்டோ
மன்னாரில்'சிவ தரிசனம்' மாதாந்த சைவ செய்திப் பத்திரிகை வெளியீட்டு விழாவும் 2019 ஆம் ஆண்டு உயர் தர பிரிவுகளில் சிறப்பு சித்தி பெற்ற மாணவர்கள் கௌரவிப்பு நிகழ்வும் சிறப்பான முறையில் ஞாயிற்றுக்கிழமை காலை மன்னாரில் இடம் பெற்றது.
மன்னார் மாவட்ட இந்து சமய வளர்ச்சி சங்கத்தின் அனுசரனையில் மாதாந்த சைவ செய்திப் பத்திரிகையாக வெளி வர இருக்கும் 'சிவ தரிசனம்' செய்திப் பத்திரிகையானது மன்னார் ஞான வைரவர் தேவஸ்தானத்தில் ஞாயிற்றுக்கிழமை15-03-2020 காலை 9 மணியளவில் வெளியீடு செய்யப்பட்டது.
மன்னார் மாவட்டத்தை தலைமைத்துவமாக கொண்டு வெளி வரும் குறித்த பத்திரிகையானது மன்னார் மாவட்டத்தில் நடை பெறும் சைவ கலாச்சார நிகழ்வுகளை தாங்கி வெளி வரவுள்ளது.
மேலும் சைவ சித்தாந்த கருத்துக்களையும் சைவத்தின் தொண்மையான கலாச்சார விழுமியங்களினை அடுத்த தலை முறைக்கு கொண்டு செல்லும் நோக்கில் குறித்த 'சிவதரிசனம்' பத்திரிகை வடிவமைக்கப்பட்டுள்ளது.
குறித்த பத்திரிகையின் முதல் பிரதியை திருக்கேதீச்சர திருப்பணிச்சபையின் இணைச் செயலாளர் எஸ்.இராமக்கிருஸ்ணன் வெளியிட்டு வைத்தார். அதனை மன்னார் மாவட்ட இந்து ஆலயங்களின் தலைவர் வைத்தியர் கதிர்காமநாதன் பெற்றுக் கொண்டார்.
மேலும் வைத்தியர் சக்தி பாலன், திருக்கேதீச்சர திருப்பணிச்சபையின் பிரதம சிவாச்சாரியாரான கருணானந்த குருக்கள் , மன்னார் இந்து சமய வளர்ச்சி சங்க தலைவர் அரசக்கோன் , மன்னார் சைவ ஆலயங்களின் பிரதி நிதிகளும் கலந்து கொண்டு சிறப்புப் பிரதிகளை பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Reviewed by Author
on
March 16, 2020
Rating:

No comments:
Post a Comment