வவுனியாவில் வேட்புமனு தாக்கல்-மன்னார் வந்த சாள்ஸ் நிர்மலநாதனுக்கு மக்கள் வரவேற்பு-
வன்னி தேர்தல் தொகுதியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பாக வேட்பாளராக போட்டியிடுகின்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதனுக்கு மன்னார் மக்கள் 18-03-2020 புதன் கிழமை மதியம் வரவேற்பு வழங்கினர்.
வவுனியாவில் இடம் பெற்ற வேட்பு மனு தாக்கலை தொடர்ந்து மன்னார் வந்த சாள்ஸ் நிர்மலநாதனுக்கு மன்னார் மாவட்ட மக்கள் மற்றும் வர்த்தகர்கள் இணைந்து 18-03-2020 புதன் கிழமை மதியம் 12.30 மணியளவில் மாலை அனுவித்து வரவேற்றனர்.
குறித்த நிகழ்வின் பின்னர் மன்னார் நகர மத்திய பகுதியில் அமைந்துள்ள தந்தை செல்வாவின் சிலைக்கு மாலை அணிவித்து தனது அரசியல் மீள் பயணத்தை ஆரம்பித்துள்ளார்.
குறித்த நிகழ்வில் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் எஸ்.பிரிமூஸ் சிராய்வா , நானாட்டான் பிரதேச சபை தவிசாளர் பரஞ்சோதி நகர சபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், மன்னார் மாவட்ட தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணித்தலைவரும் அகில இலங்கை இளைஞர் அணி தலைவருமான சட்டத்தரணி எஸ். டினேஸன் ஆகியோரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
வவுனியாவில் இடம் பெற்ற வேட்பு மனு தாக்கலை தொடர்ந்து மன்னார் வந்த சாள்ஸ் நிர்மலநாதனுக்கு மன்னார் மாவட்ட மக்கள் மற்றும் வர்த்தகர்கள் இணைந்து 18-03-2020 புதன் கிழமை மதியம் 12.30 மணியளவில் மாலை அனுவித்து வரவேற்றனர்.
குறித்த நிகழ்வின் பின்னர் மன்னார் நகர மத்திய பகுதியில் அமைந்துள்ள தந்தை செல்வாவின் சிலைக்கு மாலை அணிவித்து தனது அரசியல் மீள் பயணத்தை ஆரம்பித்துள்ளார்.
குறித்த நிகழ்வில் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் எஸ்.பிரிமூஸ் சிராய்வா , நானாட்டான் பிரதேச சபை தவிசாளர் பரஞ்சோதி நகர சபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், மன்னார் மாவட்ட தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணித்தலைவரும் அகில இலங்கை இளைஞர் அணி தலைவருமான சட்டத்தரணி எஸ். டினேஸன் ஆகியோரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் வேட்புமனு தாக்கல்-மன்னார் வந்த சாள்ஸ் நிர்மலநாதனுக்கு மக்கள் வரவேற்பு-
Reviewed by Author
on
March 19, 2020
Rating:

No comments:
Post a Comment