தலை மன்னாரில் இருந்து கச்சதீவுக்கு படகுகள் மூலம் பக்தர்கள் பயணம்-(வீடியோ)
வரலாற்றுச் சிறப்பு மிக்க கச்சதீவு புனித அந்தோனியார் திருத்தலத்தின் வருடாந்த திருவிழா சனிக்கிழமை 07-03-2020 காலை இடம் பெறவுள்ளது.
வெள்ளிக்கிழமை 06-03-2020 மாலை 4.00 மணிக்கு கொடியேற்றத்துடன் திருவிழா ஆரம்பமாவதுடன் திருச் செரூப செபமாலையும் அதனைத் தொடர்ந்து திருப்பலியும் ஒப்புக் கொடுக்கப்படும்.
நாளை சனிக்கிழமை காலை திருவிழா திருப்பலி கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது.
இந்த நிலையில் தலைமன்னார் கடற்கரையில் இருந்து மக்கள் படகுகள் மூலம் கச்சதீவை நோக்கி இன்று வெள்ளிக்கிழமை மதியம் படகுகள் மூலம் பயணமாகியுள்ளனர்.
தலைமன்னார் கடற்கரையில் கடற்படையினர் குடும்ப பதிவுகளை மேற்கொண்டு சோதனை நடவடிக்கைகளின் பின் படகுகள் மூலம் பயணமாகி உள்ளனர்.
தலைமன்னார் முதல் மன்னார் பல்வேறு கிராமங்களில் இருந்தும் மக்கள் இவ்வாறு கச்சதீவை நோக்கி பயணமாகி உள்ளனர்.
இதே வேளை கச்சதீவு புனித அந்தோனியார் திருத்தலத்திற்குச் செல்லும் பக்தர்கள் பாதுகாப்புத் தரப்பினர் மற்றும் பொலிஸாருக்கு தேவையான ஒத்துழைப்புகளை வழங்குமாறும் அதிகாரிகள் பக்தர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தகக்து.

Reviewed by Author
on
March 07, 2020
Rating:

No comments:
Post a Comment