கொரோனா அச்சுறுத்தல்: தமிழகத்தில் அனைத்து மாவட்ட எல்லைகளும் மூடப்படும்! வெளியான முக்கிய அறிவிப்பு -
இது தொடர்பான அறிவிப்பை அவர் சட்டசபையில் இன்று வெளியிட்டார்.
அதன்படி தமிழகத்தில் நாளை மாலை 6 மணி முதல் மார்ச் 31-ம் திகதி வரை அனைத்து மாவட்ட எல்லைகளை மூடவும், 144 தடை உத்தரவையும் பிறப்பித்துள்ளார்.
தனிமைப்படுத்துதல் அவசியம் என்பதால், நோய் பாதித்த நபர்கள் உள்ள மாவட்டங்களில் சில கடுமையான நடவடிக்கைகளை தற்போது மேற்கொள்வது அவசியமாகிறது என்று குறிப்பிட்ட முதல்வர் பழனிசாமி, தடை உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டார்.
இதன் முக்கிய அம்சங்கள்
1.அத்தியாவசிய மற்றும் அவசரப் பணிகள் தவிர மற்ற பொது போக்குவரத்து, தனியார் போக்குவரத்து, கார்கள், ஆட்டோ, டாக்ஸி போன்றவை இயங்காது. மாநிலங்களுக்கு இடையேயும், மாவட்டங்களுக்கு இடையேயும் ஆன போக்குவரத்து அத்தியாவசிய இயக்கத்திற்கு தவிர மற்ற இயக்கம் முற்றிலும் தடை செய்யப்படுகிறது.
2. அத்தியாவசியப் பொருட்களுக்கான, பால், காய்கறி, மளிகை, இறைச்சி, மீன் கடைகள் போன்றவை தவிர அனைத்துக் கடைகளும், வணிக வளாகங்களும், பணிமனைகளும் இயங்காது.
3. அத்தியாவசியத் துறைகள் மற்றும் அலுவலகப் பணிகள் தவிர மற்ற அரசு அலுவலகங்கள் செயல்படாது. அத்தியாவசியப் பணிகளை மேற்கொள்ளும் அரசுத் துறைகளான மாவட்ட நிர்வாகம், காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, சிறைத்துறை, பொது சுகாதாரம் மற்றும் மருத்துவத் துறை, நீதிமன்றங்கள், உள்ளாட்சி அமைப்புகள் போன்றவை தொடர்ந்து இயங்கும். எனினும், தனிநபர் சுகாதார நடவடிக்கை உட்பட அனைத்து நோய்த் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் அலுவலகங்களில் பின்பற்றப்படவேண்டும்.
தடை உத்தரவால், கர்ப்பிணிப் பெண்கள், முதியோர் ஆகியோருக்கு ஏற்படும் இடையூறுகளை அறிந்து, அவற்றை தணிக்க உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இத்தடை காலத்தில் அத்தியாவசியப் பொருட்களான உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்கள் போன்றவற்றின் போக்குவரத்துக்கும், விற்பனைக்கும் யாதொரும் தடையும் இல்லை.
கொரோனா அச்சுறுத்தல்: தமிழகத்தில் அனைத்து மாவட்ட எல்லைகளும் மூடப்படும்! வெளியான முக்கிய அறிவிப்பு -
Reviewed by Author
on
March 24, 2020
Rating:

No comments:
Post a Comment