கேரள பாதிரியாருக்கு கடும் தண்டனை வழங்கி அதிர்ச்சி கொடுத்த போப்! இது போப்புக்கான அதிகாரம் -
கேரள மாநிலத் கண்ணூர் மாவட்டம் நீண்டுநோக்கி என்ற பகுதியில் உள்ள புனித செபாஸ்டியன் தேவாலயத்தில் பாதிரியாராகவும் பள்ளிக்கூட நிர்வாகியாகவும் பணியாற்றி வந்தவர் ராபின் வடக்கும்சேரி.
இவர் 2016ஆம் ஆண்டில் அவர் நிர்வாகத்தின் கீழ் இருந்த பள்ளியில் படித்த 16வயது மாணவியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது, அச்சிறுமி கருவுற்று குழந்தை பெற்றபின் வெளிச்சத்திற்கு வந்தது.
அதன் பின் இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக உருவெடுத்தது. இதனால், ராபின் வடக்கும்சேரி வெளிநாட்டிற்கு தப்பிக்க முயன்றார். ஆனால், பொலிசார் அவரை கொச்சி விமானநிலையத்தில் வைத்து மடக்கி பிடித்தனர்.
இந்த வழக்கு விசாரணை தலச்சேரி போக்ஸோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. ராபினின் மரபணு சிறுமிக்கு பிறந்த குழந்தையின் மரபணுவுடன் ஒத்துப்போனதால் அவர் மீதான குற்றம் உறுதி செய்யப்பட்டது.

அவர் செய்த கொடூர குற்றத்துக்காக அவருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் 3லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது தலச்சேரி நீதிமன்றம்.
இந்த நிலையில் ராபின் வடக்கும்சேரியை, பாதிரியார் என்ற தகுதியின் அடிப்படையில் மதரீதியில் கடமை ஆற்றும் பணிகளிலிருந்து நீக்கி போப் ஃபிரான்சிஸ் உத்தரவிட்டுள்ளார்.
`இனிமேல், அவருக்கு எந்தச் சமய உரிமைகளும் கடமைகளும் இல்லை. அவர் ராபின் வடக்கும்சேரி என்று மட்டுமே அழைக்கப்படுவார்’ என கத்தோலிக்க திருச்சபையின் செய்தி தொடர்பாளர் ஜோஸ் கோசாரக்கல் தெரிவித்துள்ளார்.
ஒரு பாதிரியார் கத்தோலிக்க திருச்சபையிலிருந்து நிரந்தரமாக வெளியேற்றப்படுவது மிகக் கடுமையான தண்டனை மற்றும் பெரும் குற்றமாகக் கருதப்படுகிறது. இவ்வாறு செய்வதற்கு போப்புக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது.
கேரள பாதிரியாருக்கு கடும் தண்டனை வழங்கி அதிர்ச்சி கொடுத்த போப்! இது போப்புக்கான அதிகாரம் - 
 
        Reviewed by Author
        on 
        
March 02, 2020
 
        Rating: 
      
 
        Reviewed by Author
        on 
        
March 02, 2020
 
        Rating: 


No comments:
Post a Comment