டெல்லி நிஜாமூதீன் பள்ளிவாசலில் தொழுகையில் கலந்துகொண்ட 128 பேருக்கு கொரோனா -
இந்தியாவின் தலைநகர் புதுடெல்லியின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள 100 ஆண்டுகள் பழமையான தப்லிக் ஜமாத் என்ற பிரிவினருக்கு சொந்தமான நிஜாமூதீன் பள்ளிவாசலில் நடந்த தொழுகையில் கலந்துக்கொண்ட 128 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புது டெல்லியை தவிர, ஜம்மு காஷ்மீர், தெலுங்கானா, அசாம், ஆந்திரா, தமிழ் நாடு, அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகள் ஆகிய மாநிலங்களிலும் கொரோனா வைரஸ் தொற்றியவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் நிஜாமூதீன் பள்ளிவாசலில் நடந்த தொழுகையில் கலந்துக்கொண்டவர்கள் எனவும் இந்தியர்களை தவிர 300க்கும் மேற்பட்ட வெளிநாட்டினரும் இந்த மத நிகழ்வில் கலந்துக்கொண்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்தோனேசியாவைச் சேர்ந்த 72 பேர், தாய்லாந்தை சேர்ந்த 71 பேர், நேபாளத்தை சேர்ந்த 19 பேர், மலேசியாவை சேர்ந்த 20 மியன்மாரை சேர்ந்த 33 பேர் இலங்கையை சேர்ந்த 34 பேர்? பங்களாதேஷை சேர்ந்த 19 பேர், கிரிகிஸ்தானை சேர்ந்த 28 பேர டெல்லி நிஜாமூதீன் பள்ளிவாசலில் நடந்த சமய நிகழ்வில் கலந்துக்கொண்டுள்ளதாக இந்திய ஊடகங்கள கூறியுள்ளன.
இது சம்பந்தமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள நிஜாமூதீன் பள்ளிவாசல் நிர்வாகம், பள்ளிவாசலில் எந்த சட்டவிரோத நடவடிக்கையும் நடக்கவில்லை னக் கூறியுள்ளது. எனினும் இந்திய அரசாங்கம் இவர்களின் கருத்தை முற்றாக நிராகரித்துள்ளது.
நிஜாமூதீன் பள்ளிவாசல் நிர்வாகத்திற்கு எதிராக இந்திய அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
டெல்லி நிஜாமூதீன் பள்ளிவாசலில் தொழுகையில் கலந்துகொண்ட 128 பேருக்கு கொரோனா -
Reviewed by Author
on
April 01, 2020
Rating:

No comments:
Post a Comment