பிரித்தானியாவில் நாளை முதல் இவர்களின் பலி எண்ணிக்கையை அறிவிப்போம்!
கொரோனா வைரஸ் காரணமாக பிரித்தானியாவில் தற்போது வரை ஒரு லட்சத்து 57-ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 21-ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அனைத்துமே மருத்துவமனைகளில் மட்டுமே என்பதால், வெளியில் இறந்தவர்களின்(முதியோர் இல்லங்கள், வீட்டில் இறந்தவர்கள், வெளியில் இறந்தவர்கள்) எண்ணிக்கையை சேர்த்தால், இது 40 சதவீதம் வரை அதிகமாகும் என்று கூறப்படுகிறது.
இதனால் நாட்டில் உயிரிழந்தவர்களின் உண்மையான எண்ணிக்கை தெரியவில்லை.
இந்நிலையில், நாளை முதல் கொரோனா வைரஸிற்கான அதிகாரப்பூர்வ இறப்பு எண்ணிக்கையில், பரமாரிப்பு இலங்களில் இறந்தவர்களின் எண்ணிக்கையும் உள்ளடங்கும் என்று சுகாதார அமைச்சர் Matt Hancock தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்து கூறுகையில், பராமரிப்பு இல்லங்களில் கொரோனா வைரஸ் இறப்புகளின் விகிதம் மொத்தத்தில் ஆறில் ஒரு பங்காக உள்ளது,
இது போன்ற முக்கியமான தகவல்களுக்கு முடிந்தவரை வெளிப்படைத்தன்மையை நாங்கள் கொண்டு வருகிறோம்.
இதனால், நாளை முதல் ஒவ்வொரு நாளும் மருத்துவமனையில் இறப்பவர்களின் எண்ணிக்கை மட்டுமல்ல, பராமரிப்பு இல்லங்களிலும் சமூகத்திலும் இறப்புகளின் எண்ணிக்கையை வெளியிடுவோம்.
இது முன்பு சாத்தியமில்லாத ஒன்றாக இருந்தது, இருப்பினும் இதை வெளியிடுவதன் மூலம், இந்த வைரஸ் நாளுக்கு நாள் எவ்வாறு பரவுகிறது என்பதைப் பற்றிய புரிதலை நமக்கு அதிகரிக்கும்.

ஒவ்வொரு மரணத்திற்கும் பின்னால் ஒரு குடும்பத்தின் இதய துடிப்பு உள்ளது, எங்களால் முடிந்தவரை பல உயிர்களைக் காப்பாற்ற அனைத்தையும் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டு நாட்டில் மொத்தம்(மருத்துவமனைகளில்) 633 பேர் உயிரிழந்துள்ளதால், இறப்பு எண்ணிக்கை 21,749-ஆக உள்ளது
மருத்துவமனைகளுக்கு வெளியே உள்ள கொரோனா வைரஸிற்கான இறப்புகளின் எண்ணிக்கையை ஒவ்வொரு நாளும் வெளியிடுமாறு சுகாதார நிறுவனங்கள் கூறி வருகின்றன.
தேசிய புள்ளிவிவரங்களுக்கான அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள வாராந்திர புள்ளிவிவரங்களின்படி, இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் மருத்துவமனைக்கு வெளியே 6,500-க்கும் மேற்பட்ட இறப்புகள் நிகழ்ந்துள்ளதாக கூறுகிறது.
இங்கிலாந்தில் ஏப்ரல் 10 முதல் 24 வரை வீடுகளில் வசிப்பவர்கள் 4,343 பேர் இறந்துள்ளதாக, பராமரிப்பு இல்லங்களுக்கான பராமரிப்பு தர ஆணையம் (CQC) தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 10-ஆம் திகதிக்கு முன்னர், பராமரிப்பு இல்லங்களில் 1,000 இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார பகுப்பாய்வுத் தலைவர் நிக் ஸ்ட்ரைப் பிபிசியிடம் கூறியுள்ளார்.
ஏப்ரல் 17 வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் பராமரிப்பு இல்ல மரணங்களைத் தவிர்த்து, மருத்துவமனைக்கு வெளியே 1,220 இறப்புகள் நிகழ்ந்துள்ளதாக ஓஎன்எஸ் தெரிவித்துள்ளது.
இதனால் இதை எல்லாம் வைத்து பார்த்தால், நாட்டில் தற்போது வரை 24,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்பது தெரிகிறது.
இதன் மூலம், பிரான்ஸ், ஸ்பெயின் போன்ற ஐரோப்பிய நாடுகளை விட பிரித்தானியாவில் இந்த மதிப்பீட்டை வைத்து பார்த்தால் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
பிரித்தானியாவில் நாளை முதல் இவர்களின் பலி எண்ணிக்கையை அறிவிப்போம்!
Reviewed by Author
on
April 29, 2020
Rating:
No comments:
Post a Comment