பிரான்சில் 24 மணி நேரத்தில் 499 பேர் பலி! ஜேர்மனி-சுவிட்சர்லாந்துக்கு கொண்டு செல்லப்படும் நோயாளிகள் -
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்ஸ் இந்த கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு போராடி வருகிறது. நாளுக்கு நாள் பாதிக்கப்படுவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதால், அந்நாட்டு ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான், கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்காக இறக்குமதியை நம்பியிருப்பதால் மில்லியன் கணக்கான முகமூடிகளையும் ஆயிரக்கணக்கான வென்டிலேட்டர்களையும் தயாரிக்க பிரான்ஸ் விரைந்து வருகிறது.
முக்கிய மருத்துவ உபகரணங்களை தயாரிப்பதில் நாட்டின் தேவையை அம்பலப்படுத்தியுள்ளதாக கடந்த செவ்வாய் கிழமை தெரிவித்தார்.

இந்நிலையில் பிரான்சில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 499 பேர் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,523 தொட்டுள்ளது. இந்த பிரான்சிற்கு ஒரு இருண்ட நாளாக பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமின்றி இந்த 499 பேரும் மருத்துவமனையில் இறந்தவர்கள் மட்டுமே, இது தவிர வீடுகள் மற்றும் ஓய்வு பெற்ற வீடுகளில் இறந்த்வர்கள் சேர்க்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
அதே சமயம், தலைநகர் பாரிஸ் மற்றும் கிழக்கு பிரான்சிலும் உள்ள மருத்துவமனைகளில் நோயாளிகளை சமாளிக்க சிரமப்படுவதால், நோயாளிகள் சிகிச்சைக்காக ஜேர்மனி, சுவிட்சர்லாந்து மற்றும் Luxembourg ஆகிய நாடுகளுக்கு விமானம் கொண்டு செல்லப்படுகிறார்கள்.
அதே சமயம் மருத்துவ ரயில்களில் பிரான்சின் பிற பகுதிகளுக்கு மாற்றப்படுவதாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இந்த வாரம் கடினமான நாட்களாக இருக்கும் என்று அதிகாரிகள் கணித்துள்ளதால், பிரான்சில் கடுமையான ஊரடங்கு உத்தரவு நடைமுறைக்கு வரத் தொடங்கும் என்று நம்பப்படுகிறது.
பிரான்சில் 24 மணி நேரத்தில் 499 பேர் பலி! ஜேர்மனி-சுவிட்சர்லாந்துக்கு கொண்டு செல்லப்படும் நோயாளிகள் -
Reviewed by Author
on
April 01, 2020
Rating:

No comments:
Post a Comment