அமெரிக்காவில் கொரோனா வைரஸ்! மீண்டும் ஒரே நாளில் 2516 பேர் பலி -
இதனையடுத்து கொரோனா வைரஸ் தொற்றினால் அமெரிக்காவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37,135 ஆக அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 210 நாடுகளுக்கு பரவி பெரும் மனித இழப்பை ஏற்படுத்தி வருகிறது.
தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 2,248,037 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. வைரஸ் பரவியவர்களில் 1,523,119 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வைரஸ் பரவியவர்களில் இதுவரை 570,792 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு இதுவரை 154,126 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தற்போது அமெரிக்காவை திணறடித்து வருகிறது. உலக அளவில் வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கையிலும், பலி எண்ணிக்கையிலும் அந்நாடு முதலிடத்தில் உள்ளது.
இந்நிலையில், தற்போதைய நிலவரப்படி அமெரிக்காவில் பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. குறிப்பாக நேற்று ஒரே நாளில் புதிதாக 31,631 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் மட்டும் 2516 பேர் பலியாகியுள்ளனர். இதனால் அமெரிக்காவில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 37,135 ஆக அதிகரித்துள்ளது.
அமெரிக்காவில் கொரோனா வைரஸ்! மீண்டும் ஒரே நாளில் 2516 பேர் பலி -
Reviewed by Author
on
April 18, 2020
Rating:

No comments:
Post a Comment