நாடு முழுவதும் நாளை ஊரடங்கு சட்டம் அமுல்-ஜனாதிபதி செயலகம்
நாடு முழுவதும் நாளை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது
விடுமுறை பெற்றுள்ள முப்படையினர் முகாம்களுக்கு செல்வதற்கு வசதி ஏற்படுத்தும் வகையில் நாளைய தினம் நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டத்தை தவிர்த்து ஏனைய மாவட்டங்களுக்கு நாளை காலை 5 மணிக்கு நீக்கப்பட்டு இரவு 8 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படவிருந்தது.
எனினும் இந்த நடவடிக்கை காரணமாக நாளை நாடு முழுவதும் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்துவதாக சற்று முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் நாளை ஊரடங்கு சட்டம் அமுல்-ஜனாதிபதி செயலகம்
Reviewed by Author
on
April 26, 2020
Rating:

No comments:
Post a Comment