இலங்கை, மாலைத்தீவிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட 335 இந்தோனேசிய தொழிலாளர்கள்
இலங்கை மற்றும் மாலைத்தீவில் பணியாற்றி வந்த 335 இந்தோனேசிய தொழிலாளர்கள், கொரோனா வைரஸ் காரணமாக உள்ள கட்டுப்பாடுகளால் வேலைகளை இழந்திருக்கும் நிலையில் இந்தோனேசியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
இந்தோனேசியாவுக்கு திருப்பி அனுப்புவதற்கான ஏற்பாட்டை கொழும்பில் உள்ள இந்தோனேசிய தூதரகம் மேற்கொண்டுள்ளது. கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளால் இலங்கை மற்றும் மாலத்தீவில் உள்ள தொழில் நிறுவனங்கள், சொகுசு விடுதிகள் தங்கள் செயல்பாடுகளை நிறுத்தியுள்ளன.
இதனால் இந்நிறுவனங்கள் இடம்பெயர்ந்த இந்தோனேசிய தொழிலாளர்களுக்கு சம்பளத் தொகை கொடுக்க இயலவில்லை.
இந்த சூழலில் தொழில் நிறுவனங்கள், சொகுசு விடுதிகள் மற்றும் இந்தோனேசிய தொழிலாளர்களின் கோரிக்கையின் அடிப்படையில், தொழிலாளர்களை அழைத்துச் செல்ல இந்தோனேசிய தூதரகம் சிறப்பு விமானத்தை ஏற்பாடு செய்து அழைத்துச் சென்றிருக்கிறது.
இவ்வாறு சொந்த நாட்டிற்கு திரும்பும் தொழிலாளர்களை கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 14 நாட்கள் தனிமைப்படுத்தி வருகிறது இந்தோனேசிய அரசு.
இன்றைய நிலையில், இந்தோனேசியாவில் 8,607 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Reviewed by Author
on
April 26, 2020
Rating:

No comments:
Post a Comment