அண்மைய செய்திகள்

recent
-

கொரோனா வைரஸ் போன்று மற்றொரு தொற்று நோய்... உலக கோடீஸ்வரர் பில்கேட்ஸின் அடுத்த எச்சரிக்கை!


உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான பில்கேட்ஸ் இனி வரும் காலங்களில் ஒவ்வொரு 20 வருடங்களுக்கும் கொரோனா போன்ற தொற்று நோய் இருக்கும் என்று எச்சரித்துள்ளார்.
கடந்த 2015-ஆம் ஆண்டு வைரஸால் உலகமே அழியும் நிலை வரலாம் என்று உலக பணக்காரர்களில் ஒருவரும், மைக்ரோ சாப்ட் நிறுவனத்தின் நிறுவனருமான பில்கேட்ஸ் தெரிவித்திருந்தார்.
அதே போன்று இப்போது, கொரோனா என்னும் கொடிய வைரஸ் உலகையே ஆட்டம் காட்டி வருகிறது.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு கொரோனா வைரஸ் தடுப்பூசி தொடர்பில் அனைத்து முயற்சிகளும் வேகமடைந்து வருவதாகவும், அதில் மிகவும் பலனளிக்கக்கூடிய 7 மருந்துகளை தெரிவு செய்து அதற்காக பல பில்லியன் டொலர்கள் செலவிட முடிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.



இந்நிலையில் தற்போது இவர் Financial Times ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டியில், கொரோனா வைரஸ் போன்ற கொடிய நோய்களைச் சமாளிக்க மேலும் நாம் முன்னெச்சரிக்கையாக பலவற்றை செய்யாவிட்டால், ஒவ்வொரு 20 வருடங்களுக்கும் ஒரு உலகளாவிய தொற்றுநோயை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று எச்சரித்துள்ளார்.

உலக பயணத்தின் வளர்ச்சி ஒரு புறம் இருந்தாலும், எந்த நேரத்திலும் இல்லாத அளவிற்க்கு வைரஸ் தொற்றுநோய்களின் அச்சுறுத்தல் இனி வரும் காலங்களில் இருக்கும் என்று கூறியுள்ளார்.
தற்போது இருக்கும் மக்கள், கொரோனா வைரஸ் என்ற தொற்று நோயை கண்டுள்ளதால், இது அவர்களின் வாழ்க்கையில் அனுபவித்த மிகப்பெரிய நிகழ்வாக இருக்கும்.



வைரஸுக்கு எதிரான போராட்டத்தில், வளரும் நாடுகளின் போராட்டத்தை பணக்கார நாடுகள் ஆதரிக்க வேண்டும்.
டொலர்களின் தாக்கம் முற்றிலும் மோசமடையாமல் இருப்பதற்கு, தடுப்பூசி உற்பத்தியை துரிதப்படுத்த வேண்டும், உதவ வேண்டும், இது கட்டாயமாக இருக்கும் என்று நம்புவதாகவும், தடுப்புக்காக அதிக பணம் செலவழிக்காவிட்டால் உலகம் அதிக தொற்று நோய்க்கான ஆபத்தில் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர், உடல்நலம் மற்றும் சமத்துவம் போன்ற பிரச்சினைகளை சமாளிக்க பில் மற்றும் மெலிண்டா அறக்கட்டளை உதவும் என்று நம்புவதாக தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் போன்று மற்றொரு தொற்று நோய்... உலக கோடீஸ்வரர் பில்கேட்ஸின் அடுத்த எச்சரிக்கை! Reviewed by Author on April 10, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.