கொரோனாவும்....சில தெளிவற்ற மனிதர்களும்....
இந்த நூற்றாண்டின் விந்தைமிகுந்த விஞ்ஞானத்தின் அபாயமணிகளிலொன்றான சீனா வூஹானின் இறக்குமதி இப்போது எமது இலங்கைத்திரு நாட்டிலும் கொரோனா வைரஸ் கிருமி....2020
வயது வேறுபாடின்றி
இன,மத,சாதி,மொழி பேதமின்றி
ஏழை பணக்காரன் பாரபட்சமின்றி
எல்லோரிடமும் சமத்துவம் பேணும்....... கொரோனா....
கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான பணியில் ஈடுபட்டிருக்கின்றவர்கள், ஊரடங்குச் சட்டம் தொடர்ந்து அமுலாகி இருக்கின்ற வேளையிலும் மக்களுக்கான நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருக்கின்ற அரச உத்தியோகத்தர்கள், பொது அமைப்புக்களின் பிரதி நிதிகள், சமய சமூக சேவையாளர்கள்,தூய்மைப்பணியாளர்கள்,தனிநபர்கள் ஊடகவியலாளர்கள் என அனைவரும் போற்றுதலுக்கும் பாராட்டுதலுக்கும் உரியவர்கள். அத்துடன் பாதுகாப்பு பணியில் இருகின்ற முப்படையினர் இவர்களுடன் உயிரை பணயம் வைத்து சேவையாற்றுகின்ற மருத்துவர்கள் தாதியர்கள் செவிலியர்கள் அம்பியுலன்ஸ் சாரதிகள் கடவுளைப்போல் போற்றப்படவேண்டியவர்கள்.வயது வேறுபாடின்றி
இன,மத,சாதி,மொழி பேதமின்றி
ஏழை பணக்காரன் பாரபட்சமின்றி
எல்லோரிடமும் சமத்துவம் பேணும்....... கொரோனா....
- மக்களே! வெளியில் செல்லாதீர்கள், வீடுகளுக்குள் இருங்கள். இதுவே கொரோனாத் தொற்றிலிருந்து தப்புவதற்கான ஒரே வழி என அரசின் அறிவுறுத்தல்.
- கொரோனாவுக்குரிய அறிகுறிகள் தென்பட்டால் உடன் மருத்துவமனைக்கு வாருங்கள் என அழைக்கின்ற மருத்துவ சமூகம்.
- நீங்கள் வீடுகளில் இருங்கள் உங்களுக்கான கொடுப்பனவை நாங்கள் உங்களைத் தேடி வந்து தருகிறோம் என்று கூறுகின்ற அரச உத்தியோகத்தர்கள்.
- உணவு மருந்துப்பொருள் இல்லை என்றால், எங்களை அழையுங்கள். நாங்கள் உங்கள் வீடு தேடி வந்து அவற்றைத் தருகிறோம் என்று கூறும் சமூக சேவையாளர்கள் இவர்கள் ஒவ்வொருவரிலும் இறைவனின் சாயல் தெரிகின்றது.
- ஊடகவியலாள்ர்கள் இரவு பகல் பாராது செய்தி சேகரிப்பில் இருந்து உண்மையான தகவலை வழங்குவதோடு மட்டு மல்லாது தங்களுக்குரிய விசேட அனுமதியினை பயன்படுத்தி கொரோனா நிவாரணப்பணியிலும் தங்களை ஈடுபடுத்தி ஒரு சேவையாகவே செய்துவருகின்றார்கள். செய்திக்குதான் காசு சேவைக்கு அல்ல இங்கு ஊடகவியலாளர்களின் மனிதத்தன்மை வெளிப்படுகின்றது.
- கொரோனாத் தொற்றின் அபாயம் பேரிடியாய்.....இன்னும்
- அன்றாடப் பொருளாதாரத்தை இழந்து மக்கள் அவலத்தில் ......இருக்க
- அவசியமான உணவுப்பொருட்களை பதுக்கிவைத்தும் அதிக விலைக்கு விற்றும் கொள்ளை இலாபம் பெறும் பெரும் முதலைகளும் இருக்கின்றது நம்மோடுதான்...
அரசியல் செய்பவர்கள் அரசியல் செய்யத்தான் செய்கின்றார்கள்....அதுவும் ஒரு பக்கம்.
அறிக்கை பக்கம் பக்கமாய் விடுகின்றவர்கள் ஒருபக்கம்
அதை குந்தியிருந்து வேடிக்கைபார்ப்பவர்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றார்கள்.......
இதையும் தாண்டி நல்லமனத்துடன் பொதுப்பணியில் சேவை செய்கின்றவர்களை குறை சொல்வதும் கேலி கிண்டல் செய்வதும் தடுப்பதும் கெடுப்பதும் பலரின் கொள்கையும் பிரதான வேலையும் தான்.
இவர்களுக்கு தான் அழகான புது மொழி உள்ளது தானும்படுக்க மாட்டாங்க தள்ளியும் படுக்க மாட்டாங்க இவர்கள் கொரோனாவை விட ஆபத்தானவர்கள்........அவதானமாய் செயல்படவேண்டும்.
எல்லோருக்கும் எல்லாம் வேண்டும் என்ற எண்ணமும்
எல்லோரும் மனிதர்க்ள் தான் என்ற தெளிவை கண்ணுக்குத்தெரியாத கொரொனா வைரஸ் கிருமி தான் வல்லரசுகளுக்கும் வானம் தொட்ட தலைமைகளுக்கும் தலையில் சம்மட்டியால் அடித்து புரியவைத்துள்ளது. புலம்ப விட்டுள்ளது.
நாளுக்கு நாள் இறப்பு எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது முடிவில்லாமல்..........
எமது நாட்டினை கொஞ்சம் எண்ணிப்பாருங்கள்....... நாம் செய்ய வேண்டியது.....
தனித்திருப்போம்
விழிப்புடனிருப்போம்
தூய்மையாயிருப்போம்
எமது அரசுக்கு துணையாயிருப்போம்.
நிலைமை மோசமாக இருக்கும் இவ்வேளையில் நாம் அனைவரும் ஒறுமையோடு சேர்ந்து வேற்றுமை இன்றி பணியாற்றுவோம்.
உங்களுக்குத் தேவை யான உதவிகளை வழங்க நாமும் எங்களுக்கு தேவையான உதவிகளை நீங்களும் என நாமாவோம்.
மற்றவர்களிடத்தில் குறை காண்பதை விடுத்து நம்மாள் முடிந்தவரை நிறைவாக செயற்படுவோம்.
எனக்கென்ன என்ற எண்ணம் எப்போது இல்லாமல் போகுதோ அப்போதுதான் உண்மையான மனிதப்பண்பு மலரும்.
கொரோனா தனி ஒருவனின் பிரச்சினையல்ல ............!!!
கலைச்செம்மல் வை.கஜேந்திரன்,BA
கொரோனாவும்....சில தெளிவற்ற மனிதர்களும்....
Reviewed by Author
on
April 26, 2020
Rating:

No comments:
Post a Comment