கொரோனா நோய் நீங்க மருதமடு அன்னையின் விஷேட ஆசீரை மன்னார் ஆயர் வழங்கினார்.
தற்பொழுது அச்சத்தைச் ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று நோயிலிருந்து உலக மக்கள் பாதுகாக்கப்படவும் இந்த வைரஸ் நோயை கட்டுப்படுத்த விஞ்ஞானம் மற்றும் பலரும் உறங்கியிருக்கின்ற இவ்வேளையில் சமயத்தைம் கடவுளையும் ஆன்மீகத்தையும் பின்பற்றும் மக்கள் சார்பாக இன்று மன்னார் மறைமாவட்டத்தின் யாத்திரிகர் ஸ்தலமான புதுமைமிக்க மருதமடு அன்னையின் ஆலயத்தில் மன்னார் மறைமாவட்ட ஆயர் கலாநிதி மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோஆண்டகை அவர்களால் விஷேட வழிபாடு இடம்பெற்றது.
கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மக்கள் பாதுகாக்கப்படவும் இந்த வைரஸ் நோயினால் இறந்த உறவுகளுக்காகவும் வைரஸ் நோய்க்கு உள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளர்கள் சீக்கிரம் குணமடையவும் இவ் நோயை கட்டுபடுத்துவதற்கான முயற்சிகளை
மேற்கொள்வோர்களுக்காகவும் இறை வேண்டுதல் கேட்கப்பட்டு மருதமடு அன்னையின் திருச் சுரூப ஆசீரை வழங்கினார்.
இவ் மருதமடு அன்னையின் திருச்சுரூபம் வருடத்தில் இருமுறையே
சிம்மாசனத்திலிருந்து இறக்கப்பட்டு ஆசீர் வழங்குவது வழமையாகும்
ஆனால் (07.04.2020) இவ் திருச்சுரூபம் விஷேமாக இறக்கப்பட்டு கொரோனா நோய் அழிந்து போக விஷேட ஆசீரை மன்னார் ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை வழங்கியதும் குறிப்பிடத்தக்கது.
கொரோனா நோய் நீங்க மருதமடு அன்னையின் விஷேட ஆசீரை மன்னார் ஆயர் வழங்கினார்.
Reviewed by Author
on
April 08, 2020
Rating:

No comments:
Post a Comment