உலகின் பல நாடுகளில் கொரோனா விதியை மீறினால் கொடுக்கப்படும் தண்டனைகள்? வெளியான முழு விபரம் -
உலகையே அச்சுறுத்தும் கொடிய நோயாக கொரோனா வைரஸ் உள்ளது. இந்த வைரஸ் காரணமாக தற்போது வரை 1,380,144 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 78,226 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதன் காரணமாக, பிரித்தானியா, பிரான்ஸ், அமெரிக்கா, ஜேர்மனி போன்ற நாடுகளில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அப்படி இந்த கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது அபராதமோ அல்லது சிறையில் அடைக்கவோ அரசு பொலிசாருக்கு அதிகாரம் கொடுத்துள்ளது.
அந்த வகையில் எந்தெந்த நாடுகளில் ஊரடங்கு மற்றும் அரசு விதித்திருக்கும் தடைகளை மீறுபவர்களுக்கு என்ன தண்டனை மற்றும் அபராதம் போன்ற தகவல்களை பார்ப்போம்.
அமெரிக்கா
கொரோனாவால் பாதிக்கப்பட்ட கடுமையான நாடாக அமெரிக்கா உள்ளது. இங்கு அங்கே அதிகம் பாதிக்கப்பட்ட நியூயார்க் மாகாணத்தில், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காத மக்களுக்கு 38 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படுகிறது.ஒவ்வொரு மனிதருக்கும் இடையில் 6 அடி இடைவெளி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறுவோருக்கு சிறைத் தண்டனையும் கொடுக்கப்படுகிறது.
ஸ்பெயின்
ஸ்பெயினில் அத்தியாவசியத் துறைகள் மட்டுமே அனுமதி, அதாவது மருத்துவமனைகள், மருந்தகங்கள், உணவகங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் திறந்திருக்கும்.
இதைத் தவிர விதிமீறல்களில் ஈடுபடுவோருக்கு 100 பவுண்டுகளில் இருந்து 6 லட்சம் பவுண்டுகள் வரை அபராதம். அவசரகால நேரத்திலும் போராட்டங்களில் ஈடுபடுவோருக்கு சிறைத் தண்டனை.இத்தாலி
கொரோனா வைரஸால் அதிக உயிரிழப்பை சந்தித்து வரும் நாடுகளில் இத்தாலியும் ஒன்று, இங்கு மக்கள் வீட்டை விட்டு வெளியே சென்றால், விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்யவேண்டும்.அப்படி அவர்கள் நாட்டின் விதிமுறைகளை மீறினால், 200 பவுண்டில் இருந்து 3 ஆயிரம் பவுண்டுகள் வரை.
ஜேர்மனி
ஜேர்மனியில் தேசிய அளவிலான ஊரடங்கு உத்தரவு இல்லையென்றாலும், அங்கு இரண்டுக்கும் மேற்பட்ட மக்கள் கூடுவதற்கு தடை.தண்டனைகளைப் பொறுத்தவரை அந்தந்த மாகாணங்களே முடிவு செய்துகொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, மேற்கத்திய ஜேர்மன் மாகாணங்களில் 25 ஆயிரம் பவுண்டுகள் வரை அபராதம் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
பிரான்ஸ்
பிரான்ஸில் இந்த கொரோனா வைரஸ் காரணமாக, வீட்டுக்குள்ளேயே இருக்கவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது, வெளியே செல்ல விரும்புபவர்கள் குறிப்பிட்ட விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து கொண்டு செல்ல வேண்டும். உணவு, உடல்நலம் அல்லது குடும்பத்தினரின் அவசியத் தேவைக்காக வெளியே செல்லலாம்.அதோடு மக்கள் கிளம்பும் போதோ, வீடு திரும்பும் நேரத்தைக் குறிப்பிட வேண்டும். விதிகளை மீறினால் 135 பவுண்டுகள் வரை அபராதம். தொடர்ந்து தவறு செய்தால் 200 பவுண்டுகள் செலுத்த வேண்டும். ஒரே மாதத்தில் 4 முறை விதிமீறல் என்றால் 6 மாத சிறைத் தண்டனை.
பிரித்தானியா
பிரித்தானியாவில் மூன்று வாரங்களுக்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் குறிப்பிட்ட சில காரணங்களுக்காக, அதாவது அத்தியாவசிய தேவை, உடற்பயிற்சி, வீட்டில் கண்டிப்பாக வேலை செய்ய முடியா நிலை உள்ளவர்களுக்கு என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.இந்த விதிமுறைகளைப் பின்பற்ற மறுத்தால் உடனடியாக 60 பவுண்டுகள் அபராதம். மீண்டும் தவறு செய்தால் அதிகபட்சமாக 960 பவுண்டுகள் வரை அபராதம் உண்டு.
மெக்சிகோ
மெக்சிகோவில் கொரோனா அறிகுறிகளுடன் இருப்பவர்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும். அதை மீறுபவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு 2.7 லட்சம் ரூபாய் அபராதமும் உண்டு.தென் ஆப்பிரிக்கா
தென் ஆப்பிரிக்காவின் சொவேட்டோ பகுதியில் இளைஞர்கள் தோப்புக்கரணம் போடவைக்கப்பட்டதாகக் கண்டனங்கள் எழுந்தன. விதிமுறைகளை மீறுபவர்களுக்கு 6 மாத சிறைத் தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படுகிறது.சவுதி அரேபியா
சவுதி அரேபியாவில் கொரோனா குறித்த விதிமுறைகளை மீறுபவர்களுக்கு 10 ஆயிரம் ரியால்கள் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. பயணிகள் தங்கள் உடல்நலன் குறித்த விவரங்களை மறைக்கும்பட்சத்தில் 98 லட்சம் ரூபாய் வரை அபராதமாக விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.பிலிப்பைன்ஸ்
கொரோனா ஊரடங்கு உத்தரவுகளை மீறும் குடிமக்களைச் சுட்டுக்கொல்லுமாறு பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டட்டர்ட்டே உத்தரவிட்டுள்ளார். காவல்துறை மற்றும் ராணுவத்துக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உலகின் பல நாடுகளில் கொரோனா விதியை மீறினால் கொடுக்கப்படும் தண்டனைகள்? வெளியான முழு விபரம் -
Reviewed by Author
on
April 08, 2020
Rating:

No comments:
Post a Comment