அண்மைய செய்திகள்

recent
-

நாடளாவிய ரீதியில் திடீர் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டமைக்கான காரணம் என்ன? -

நாடாளவிய ரீதியில் இன்றிரவு 8 மணி முதல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என நேற்று இரவு அரசாங்கம் திடீர் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

இன்று இரவு 8 மணிக்கு அமுலாகும் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை காலை 5 மணி வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு காரணம் என்ன என பலராலும் வினவப்பட்டு வந்தது. எனினும் வெள்ளிக்கிழமை முதல் நீண்ட வார இறுதி விடுமுறை தினம் வருகின்றமையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை மே தினம் என்பதனாலும், மே தினம் என்பது அரச, வர்த்தக விடுமுறை தினம் என்பதனாலும் திங்கட்கிழமை வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

கடந்த வாரமும் வார இறுதி நாட்களில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கொரோனா வைரஸ் அபாயமுள்ள வலயமான மேல் மாகாணம் மற்றும் புத்தளம் மாவட்டம் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் ஊரடங்கு சட்டம் காலை 5 மணி முதல் இரண்டு வரை 8 மணி தளர்த்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நாடளாவிய ரீதியில் திடீர் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டமைக்கான காரணம் என்ன? - Reviewed by Author on April 30, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.