பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் கொரோனாவால் மரணம் -
50 வயதான ஜாபர் கடந்த மூன்று நாட்களாக பெஷாவரில் உள்ள தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் வென்டிலேட்டரில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் கொரோனாவுக்கு உயிரிழந்த முதல் கிரிக்கெட் வீரர் சர்பராஸ் ஆவார்.
1988 ஆம் ஆண்டில் அறிமுகமான சர்பராஸ் , மேலும் பெஷாவருக்காக 15 முதல் தர ஆட்டங்களில் விளையாடி 616 ஓட்டங்கள் எடுத்தார்.
6 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 96 ஓட்டங்கள் எடுத்த சர்பராஸ், 1994 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.

பின்னர், சீனியர் மற்றும் 19 வயதிற்கு உட்பட்ட பெஷாவர் அணிகளின் பயிற்சியாராக திகழ்ந்தார்.
மறைந்த ஜாபர் சர்பராஸ் பாகிஸ்தான் சர்வதேச கிரிக்கெட் வீரர் அக்தர் சர்பராஸின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.அக்தர் 10 மாதங்களுக்கு முன் புற்றுநோய் பாதிப்பால் காலமானார்.
பெஷாவர் நகரில் மட்டும் கொரோனா பாதிப்பால் கிட்டதட்ட 100 பேர் உயிரிழந்துள்ளனர்.
பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் கொரோனாவால் மரணம் -
Reviewed by Author
on
April 15, 2020
Rating:
No comments:
Post a Comment