ஜேர்மன் மருத்துவ கருவிகள்... மீண்டுவரும் கிம் ஜாங் -
வடகொரியாவில் கிம் குடும்பத்தார் மட்டும் சிகிச்சை பெறுவதற்காக உருவாக்கப்பட்டுள்ள சிறப்பு மருத்துவமனையில், கிம் ஜாங் தற்போது சிகிச்சையில் இருந்து வருவதாக தென் கொரிய பத்திரிகை ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
குறித்த மருத்துவமனையில் இருதயம் தொடர்பான நோய்களுக்கு சிகிச்சை அளிக்க தேவையான அனைத்து ஏற்பாடுகளும் வடகொரிய நிர்வாகம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
கிம் ஜாங்-ன் தாத்தாவும் வடகொரியாவின் தந்தையுமான கிம் சுங் நோய்வாய்ப்பட்டு மரணமடைந்த பின்னர் 1994-ல் கட்டி முடிக்கப்பட்ட மருத்துவமனையாகும் இது.
தலைநகரில் இருந்து சுமார் 150 கி.மீ தொலைவில் Hyang San என்ற பகுதியில் குறித்த மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.
கிம் ஜாங்-கு இதய அறுவை சிகிச்சை முன்னெடுத்த மருத்துவர், வெளிநாடுகளில் பணியாற்றியவர் எனவும், சிறப்பு பயிற்சி பெற்றவர் எனவும் கூறப்படுகிறது.
ஆனால் அவர் யார் என்பது தொடர்பான தகவல்களை தென் கொரிய பத்திரிகை வெளியிட மறுத்துள்ளது.
மட்டுமின்றி, கிம் குடும்பத்தாருக்கு வழங்கப்படும் அதே அளவு பாதுகாப்பும் குறித்த மருத்துவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
மேலும், ஜேர்மனி, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தற்கால மருத்துவ கருவிகளை குறித்த மருத்துவமனையில் பயன்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
அதிக புகைபிடித்தல், உடல் பருமன் மற்றும் சோர்வு ஆகியவற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த கிம் ஜாங், மருத்துவ குழுவினரின் ஆலோசனையின்படியே இதய சிகிச்சைக்கு ஒப்புக்கொண்டதாக தென் கொரிய பத்திரிகை தகவல் வெளியிட்டுள்ளது.
சிறப்பான சிகிச்சையின் பலனாக கிம் ஜாங் மீண்டு வருவதாகவும், ஆனால் சில நாட்கள் அவர் ஓய்வில் இருப்பார் எனவும் கூறப்படுகிறது.
ஜேர்மன் மருத்துவ கருவிகள்... மீண்டுவரும் கிம் ஜாங் -
Reviewed by Author
on
April 24, 2020
Rating:

No comments:
Post a Comment