கனடாவில் கொரோனா தொற்றால் இலங்கை தமிழ் தம்பதி மரணம்! பெற்றோரை இழந்து தவிக்கும் மூன்று மகள்கள் -
ஒன்றாறியோவின் பிராம்டனில் வசித்து வந்தவர் நாகராஜா தேசிங்குராஜா (61). இவர் மனைவி புஷ்பராணி (56).
தம்பதிக்கு 29, 22, 19 வயதுகளில் மூன்று மகள்கள் உள்ளனர்.
இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பால் நாகராஜா மற்றும் புஷ்பராணி ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளனர்.
அவர்களின் மகள்களுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பெற்றோர் உயிரிழந்துவிட்டதால் மூவரும் மனதளவிலும், உடல் அளவில் மிகுந்த வலியை அனுபவித்து வருகின்றனர்.
இது குறித்து உயிரிழந்த தம்பதியின் உறவினர் நாதன் கதிர்காமநாதன் கூறுகையில், கடந்த 2ஆம் திகதி நாகராஜா மற்றும் புஷ்பராணி ஆகிய இருவருக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
பின்னர் குடும்பத்தார் பரிசோதனை செய்த போது அனைவருக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது கனடா ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த சூழலில் ஏப்ரல் 13ஆம் திகதி புஷ்பராணியும், 15ஆம் திகதி நாகராஜாவும் உயிரிழந்தனர். இருவரும் உயிரிழந்தது வருத்தமளிக்கிறது, இருவரும் சேர்ந்து இறந்ததற்கு காரணம் உள்ளது.
திருமணமான 30 வருடத்தில் மனைவியை நல்லபடியாக நாகராஜா கவனித்து கொண்டார்.
நாகராஜா Gate Gourmet Canada-ல் பணிபுரிந்து வந்தார்.
அதே சமயம் பகுதி நேர பணியாக உதயன் என்ற தமிழ் பத்திரிக்கையை Bramptonல் உள்ள கடைகள் மற்றும் கோவில்களில் வழங்கி வந்தார்.
அவர் கடைசியாக மார்ச் 27ஆம் திகதி தான் பத்திரிக்கையை வழங்கியுள்ளார்.
அதனால் நாகராஜா சென்ற தமிழ் கடைகள், இலங்கையர்கள் கடைகள் மற்றும் மூத்தவர்களின் குடியிருப்புகளில் உள்ள மக்கள் இது தொடர்பில் எச்சரிக்கையாகவும், விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும் என விரும்புகிறேன் என கூறியுள்ளார்.
இதனிடையில் தம்பதியரின் மூன்று மகள்களுக்கு நிதி உதவி செய்ய குடும்ப நண்பர் ஒருவர் GoFundMe மூலம் நிதி வசூல் செய்து வருகிறார்.
அதில் வியாழன் பகல் வரை கிட்டத்தட்ட $60,000 வரை நிதி சேர்ந்துள்ளது.
கனடாவில் கொரோனா தொற்றால் இலங்கை தமிழ் தம்பதி மரணம்! பெற்றோரை இழந்து தவிக்கும் மூன்று மகள்கள் -
Reviewed by Author
on
April 18, 2020
Rating:

No comments:
Post a Comment