ஆபத்தான கொரோனா வைரஸை அழிக்கும் சூரிய ஒளி -
அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பப் பிரிவிற்குப் பொறுப்பான உயர் அதிகாரி வில்லியனம் பிரயன் இது குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.
மேற்பரப்புக்கள் மற்றும் வளியிலும் கொரோனா வைரஸ்களை அழிப்பதில் சூரிய ஒளியின் பங்களிப்பு வீரியமானதாக காணப்படுகின்றது என தெரிவித்துள்ளார்.
வெப்ப நிலையிலும் ஈரப்பதனுடான வானிலையிலும் சூரிய ஒளியின் மூலம் கொரோனா வைரஸை அழிக்க முடிவதனை அவதானித்ததாக தெரிவித்துள்ளார்.
வெப்ப அதிகரிப்பு அல்லது ஈரப்பதன் அதிகரிப்பு ஆகிய இரண்டு சூழ்நிலையிலும் வைரஸிற்கு உசிதமானதல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வெப்பநிலை அதிகரிப்பு அல்லது அதிக ஈரப்பதன் நிலைமைகளில் வைரஸ் அழிவடைகின்றது எனவும் இதற்கு சூரிய ஒளியின் உதவி கிடைக்கும் போது வைரஸ் அழிவடையும் நேரம் துரிதமாகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக சூரிய ஒளியில் காணப்படும் புற ஊதாக் கதிர்களின் தாக்கம் முக்கியமான ஓர் வகிபாகத்தைக் கொண்டிருப்பதாக ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
சூரிய ஒளி கிடைக்கப் பெறாத உலர்ந்த மேற்பரப்புக்களில் கொரோனா வைரஸ் நீண்ட நேரம் உயிர்ப்புடன் இருக்கக் கூடிய சாத்தியம் உண்டு என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆபத்தான கொரோனா வைரஸை அழிக்கும் சூரிய ஒளி -
Reviewed by Author
on
April 25, 2020
Rating:

No comments:
Post a Comment