மன்னார்-ஊரடங்கு நிலையை பயன்படுத்தி அமைக்கப்பட்ட சட்டவிரோத கட்டுமான பணி நகரசபையால் நிறுத்தம்
மன்னார் மாவட்டத்தில் ஊரடங்கு சட்ட நிலைமையை பயன்படுத்தி கட்டப்பட்ட சட்டவிரோத கட்டுமான வேலை மன்னார் நகர சபையால் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
மன்னார் நகர சபைக்கு உட்பட்ட மூர் வீதி பகுதியில் உள்ள கற்றல் வள நிலையத்திற்கு அருகாமையில் உள்ள பகுதியில் நகர சபையிடம் எந்தவொரு அனுமதியும் பெறாமல் பல வருடங்களாக மன்னார் நகரசபையால் நிர்மாணப்பணிக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிர்மாண பணியானது ஊரடங்கு சட்டத்தை பயன்படுத்தி மீண்டும் அமைக்கப்பட்ட நிலையில் மக்கள் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் நகர சபை குறித்த கட்டுமான பணியை உடனடியாக நிறுத்தியுள்ளது.
இருப்பினும் சில நாட்களாக இடம் பெற்ற கட்டுமான வேலையானது போக்குவரத்துக்கு இடைஞ்சலாக இருப்பதாகவும் அரச தொடர்பாடல் மின் கம்பம் ஒன்றையும் அக்காணிக்குள் வைத்து சுற்று மதில் எழுப்பப்பட்டுள்ளதாகவும் எனவே அப்பகுதிகளில் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளதனால் ஏற்கனவே கட்டப்பட்ட கட்டுமான பகுதிகளை முழுவதுமாக இடித்து அப்புறப்படுத்தி தருமாறு மூர் வீதி பொதுமக்கள் நகர சபையிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதே நேரத்தில் குறித்த கட்டு மாண பனியுடன் தொடர்புபட்ட நபர் அதே பகுதியில் என்னும் ஒரு கட்டுமானப் பணியில் தொழிலாளர்களை ஈடுபடுத்தியுள்ளதாகவும் ஆனாலும் அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றாதும் அதே நேரத்தில் உரிய அனுமதி பெறாமலும் கட்டுமான பணியில் ஈடுபடுவதாகவும் அப்பகுதி மக்கள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர். எனவே குறித்த விடயம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரி உடனடியாக கவனம் செலுத்தி கட்டுமான பணிகளை நிறுத்துமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Reviewed by Author
on
April 29, 2020
Rating:

No comments:
Post a Comment