மேலும் 11 கடற்படையினருக்கு கொரோனா வைரஸ் – மொத்த எண்ணிக்கை 835 ஆக அதிகரிப்பு
இலங்கையில் மேலும் 11 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் எண்ணிக்கை 835 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் இவ்வாறு அடையாளம் காணப்பட்ட 11 பேரும் கடற்படையினர் என்றும் சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 586 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதுடன் 240 பேர் பூரண குணம் அடைந்துள்ளனர். 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 11 கடற்படையினருக்கு கொரோனா வைரஸ் – மொத்த எண்ணிக்கை 835 ஆக அதிகரிப்பு
Reviewed by Author
on
May 09, 2020
Rating:

No comments:
Post a Comment