குவைத்தில் 3 இலங்கையர்கள் உயிரிழப்பு....!!!
குவைத்தில் தொழில்புரிந்துவந்த மூன்று இலங்கையர்கள் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்த தகவலை குவைத் -ஸ்ரீலங்கா ஒன்றியத்தின் இணைப்பாளரான நிசாந்த சஞ்ஜீவ மடபாத்த வெளியிட்டுள்ளார்..
குவைத்தில் பர்வானியா, அஹமதி, ஹவாலி, ஜஹாரா ஆகிய நகரங்களில் தொழில்புரிந்து வரும் இலங்கையர்கள் பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இவர்களில் பலர் சட்டவிரோதமான முறையில் அங்கு தங்கியிருப்பதாக கூறும் அவர், வீசா வைத்துக்கொண்டு குவைத்தில் தொழில்புரிந்துவரும் இலங்கையர்கள் பலர் வாடகை வாகன சாரதிகளாக தொழில்புரிந்து வருகின்றதாகவும் கூறியுள்ளார்.
இந் நிலையில், அவர்களில் பலருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
குவைத்தில் 3 இலங்கையர்கள் உயிரிழப்பு....!!!
Reviewed by Author
on
May 27, 2020
Rating:

No comments:
Post a Comment