நாட்டில் 863 பேருக்கு கொரோனா தொற்று
நாட்டில் பதிவான கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 863 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் மேலும் 7 பேருக்கு இன்று (11) கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, Covid – 19 நோயாளர்களில் மேலும் 22 பேர் குணமடைந்துள்ளதையடுத்து, தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 343 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதற்கமைய, தொடர்ந்தும் 533 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்றினால் நாட்டில் இதுவரை 9 மரணங்கள் பதிவாகியுள்ளன.
நாட்டில் 863 பேருக்கு கொரோனா தொற்று
Reviewed by Author
on
May 11, 2020
Rating:

No comments:
Post a Comment