ஜனாதிபதி கூறிய விடையம் தமிழ் மக்களின் பிரச்சினையை நோக்கிய விடயம் இல்லை-மன்னாரில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு
தமிழர்களின் பிரச்சினைகளுக்கு கடந்த கால தமிழ் தலைமைகளும்
தற்போதைய தலைமைகளும் தான் காரணமாக உள்ளனர் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
தெரிவித்தார்.
மன்னார்
உயிலங்குளம் பிரதான வீதியில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி)
அலுவலகம் இன்று திங்கட்கிழமை காலை 9 மணியளவில் வைபவ ரீதியாக திறந்து
வைக்கப்பட்டது.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா குறித்த அலுவலகத்தை வைபவ ரீதியாக திறந்து வைத்தார்.
-அதனை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் அவ்வாறு தெரிவித்தார்.
-அவர் மேலும் தெரிவிக்கையில்,,
சர்வதேச
சமூகம் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்குமாக இருந்தால் எந்த நாடுகளாக
இருந்தாலும் ஜனாதிபதி அதில் இருந்து ஒதுங்குவதாகவே அண்மையில் கூறி
இருந்தார்.
ஜனாதிபதி தன்னுடைய கருத்தை கூறி இருந்தார்.குறித்த கருத்து தமிழ் மக்களை எந்த வகையிலும் பாதீக்கும் என்று நான் நினைக்கவில்லை.
தமிழர்களின் பிரச்சினைகளுக்கு கடந்த கால தமிழ் தலைமைகள் தான் காரணமாக உள்ளனர் என நான் நம்புகின்றேன்.
-சேர்
பொன் ராமநாதன் முதல் சம்மந்தன் வரை அதற்கு இடைப்பட்ட எல்லோறும் அவர்கள்
பிரச்சினைகளை சரியான முறையில் அனுகவில்லை என்பதே எனது அனுபவம்.
-
சுமார் 15 வருடங்களுக்கு மேல் ஆயுதப்போராட்டத்தின் முன் அனுபவம், சுமார்
30 வருடங்களுக்கு மேல் ஜனநாயக வழி முறையிலான அனுபவங்கள் இருக்கின்றது.
இந்த அனுபவங்களின் ஊடாகவே நான் கூறுகின்றேன்.
சேர்
பொன் ராமநாதன் முதல் சம்மந்தன் வரை இருக்கக்கூடிய, இருந்த தமிழ்
தலைமைகள் தான் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீரா பிரச்சனைகளாக கொண்டு
சென்றுள்ளனர்.
நாங்கள் சரியான முறையில் அனுகவில்லை. ஜனாதிபதி கூறிய விடையம் தமிழ் மக்களின் பிரச்சினையை நோக்கிய விடையம் இல்லை. என தெரிவித்தார்.
-மேலும்
இதுவரை இலங்கையில் கைதுசெய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் தொடர்பாகவும்
இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கை மீனவர்களின் விடுதலை குறித்து
ஊடகவியலாளர்களினால் கேள்வி எழுப்பப்பட்டது.
-அதன் போது பதில் வழங்கி அமைச்சர்.
-கொரோனா
பிரச்சினை காரணமாக வெளியில் இருந்து செல்வோறுக்கான போக்கு வரத்துக்கள் தடை
செய்யப்பட்டுள்ளது. இந்த மாத கடைசியில் இந்தியாவில் இருந்து விசேட கப்பல்
ஒன்று இலங்கைக்கு வர உள்ளது.
அதில்
கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்து
அனுப்பிவைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுள்ளதாக தெரிவித்தார் .மேலும்
இந்தியாவில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள இலங்கை மீனவர்களையும்
நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என அமைச்சர்
மேலும் தெரிவித்தார்.
ஜனாதிபதி கூறிய விடையம் தமிழ் மக்களின் பிரச்சினையை நோக்கிய விடயம் இல்லை-மன்னாரில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு
Reviewed by Author
on
May 23, 2020
Rating:

No comments:
Post a Comment