பாடசாலை திறப்பது தொடர்பில் தீர்மானம் எடுக்கவில்லை-கல்வி அமைச்சு வெளியிட்ட அறிக்கை -
எதிர்வரும் ஜூன் முதலாம் திகதி முதல் சில கட்டங்களாக பாடசாலைகள் திறக்கப்படும் எனவும் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஏனைய ஊழியர்கள் மே 11 ஆம் திகதி முதல் பணிக்கு வர வேண்டும் என வெளியாகியுள்ள செய்திகளில் எந்த உண்மையும் இல்லை என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
சில அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்கள் இன்று வெளியிட்டிருந்த செய்தி தொடர்பாக பதிலளித்த கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் டளஸ் அழகப்பெரும, இலங்கையில் முதலாவது கொரோனா நோயாளி அடையாளம் காணப்பட்டதும், நாட்டின் பாடசாலை மாணவர்களின் உயிர்களை சவாலுக்கு உட்படுத்தாது, கல்வியமைச்சு, அனைத்து பாடசாலைகளையும் மூடும் தீர்மானத்தை உடனடியாக நடைமுறைப்படுத்தியது எனக் கூறியுள்ளார்.
பாடசாலை மாணவர்களின் உயிர்களை பாதுகாத்து கொடுக்கும் பொறுப்பை அடிப்படையாக கொண்டு அந்த தீர்மானத்தை அமுல்படுத்தியது போன்று பாடசாலைகளை மீண்டும் திறப்பது தொடர்பான தீர்மானமும் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிக்கும் தினம், ஆரம்பிக்கும் விதம், சுகாதார அமைச்சின் ஆலோசனை மற்றும் அரசாங்கம் எடுக்கும் கொள்கை ரீதியான நடவடிக்கைகளுக்கு அமைவாக தீர்மானிக்கப்படும் என கல்வியமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
மாகாண வலய கல்வி அதிகாரிகள், கல்வித்துறையின் ஏனைய நிறுவனங்களின் பிரதானிகள் தெளிவுப்படுத்திய பின்னரே அந்த தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் கல்வியமைச்சின் செயலாளர் கூறியுள்ளார்.
பாடசாலை திறப்பது தொடர்பில் தீர்மானம் எடுக்கவில்லை-கல்வி அமைச்சு வெளியிட்ட அறிக்கை -
Reviewed by Author
on
May 06, 2020
Rating:

No comments:
Post a Comment