மன்னார் கட்டுக்கரை குளத்தின் நீர் திறந்து விடப்பட்டது.....!
மன்னார்- கட்டுக்கரை குளத்தின் கீழான சிறு போக நெற் செய்கைக்கான நீர் வினியோகம் இன்று புதன் கிழமை (27) காலை வைபவ ரீதியாக சமையத் தலைவர்களின் ஆசியோடு 11 ஆம் கட்டை வாய்க்கால் துருசில் சம்பிரதாய முறைப்படி திறந்து வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வு இன்று புதன் கிழமை காலை 9.30 மணிக்கு ; மன்னார் மாவட்ட நீர்பாசன பணிப்பாளர் நடராசா யோகராசா தலைமையில் இடம் பெற்றுள்ளது.
நீர்ப்பாசன பொறியியலாளர்கள்,சமயத் தலைவர்கள்,கட்டுக்கரைக் குளத்தின் வாய்கால் அமைப்பு பிரதிநிதிகள்,விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் ,திணைக்கள அதிகாரிகள் , விவசாய அமைப்பக்களின் பெண் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
குறித்த நிகழ்வானது 11ஆம் கட்டை வாய்க்கால்ப் பகுதியில் சமையத் தலைவர்களின் இறை வேண்டுதலுடன் பொங்கல் படையளிட்டு சமைய அனுஸ்தானங்களுடன் மலர் துவி 11ஆம் கட்டை வாய்க்கால் துருசு சம்பிரதாய முறைப்படி அதிகாரிகளினால் திறந்து வைக்கப்பட்டது.
வாய்க்காலில் பாய்ந்தோடம் நீருக்கும் மலர் துர்வி கைகளைத்தட்டி விவசாயிகள் மகிழ்சி ஆரவாரம் செய்ததை அவதானிக்க முடிந்தது.
பின்னர் குறித்த பகுதியில் இடம் பெற்ற நிகழ்வில் சமையத் தலைவர்களின் ஆசிச் செய்திகளுடன் நிறைவு பெற்றமை குறிப்பிடத்தக்கது.




மன்னார் கட்டுக்கரை குளத்தின் நீர் திறந்து விடப்பட்டது.....!
Reviewed by Author
on
May 27, 2020
Rating:

No comments:
Post a Comment