ஊரடங்கு சட்டத்தை மீறிய 1,230 பேர் கைது
காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த காலப்பகுதியில் 575 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி தொடக்கம் இதுவரையான காலப்பகுதியில் ஊரடங்கு சட்டத்தை மீறிய 55,148 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த காலப்பகுதியில் 15,011 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
இதேவேளை, நாளை 17 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.
கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
ஏனைய 23 மாவட்டங்களிலும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை தவிர்ந்த ஏனைய நாட்களில் தற்போது காணப்படும் வகையில் தினமும் இரவு 8 மணி தொடக்கம் மறுநாள் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு சட்டத்தை மீறிய 1,230 பேர் கைது
Reviewed by NEWMANNAR
on
May 16, 2020
Rating:

No comments:
Post a Comment