கொரோனா வைரஸ் தொற்று! நீண்ட கால தமிழ் தேசிய பற்றாளர் பிரதாபன் லண்டனில் உயிரிழப்பு -
கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நீண்டகால தமிழ்த்தேசிய செயற்பாட்டாளரான லோகசிங்கம் பிரதாபன் லண்டனில் உயிரிழந்துள்ளார்.
வவுனியாவை பிறப்பிடமாக கொண்ட பிரதாபன் லண்டனில் செயற்பட்டு வரும் பிரித்தானிய விளையாட்டுக் கழகத்தில் முக்கிய உறுப்பினராக செயற்பட்டு வந்துள்ளார்.
இவர் யாழ் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நில், கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த அவர் கடந்த 2ம் திகதி லண்டனில் உயிரிழந்துள்ளார்.
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு கடந்து மூன்று வாரங்களுக்கு மேலாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லோகசிங்கம் பிரதாபன், தமிழ் தேசிய நிகழ்ச்சிகளில் பிரித்தானியாவில் நடைபெறும் மெய்வல்லுநர் போட்டிகள் மற்றும் விளையாட்டு நிகழ்வுகளில் முன்னிற்று செயற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிரித்தானிய தமிழ் விளையாட்டுத்துறை ஒரு சிறந்த நிர்வாகியை இழந்துள்ளதாக, பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று! நீண்ட கால தமிழ் தேசிய பற்றாளர் பிரதாபன் லண்டனில் உயிரிழப்பு -
Reviewed by Author
on
May 05, 2020
Rating:

No comments:
Post a Comment